siimaatti
அகவிளக்கில் மலர்ந்தவளே
அகம் முழுதும் எரிகின்றாய்
உடல்முழுதும் நீ இருக்காய்
உயிரனுவாய் நீ வருவாய்!

தித்திக்கும் உன் நினைவு
திகட்டாத உன் மேனி
பட்டத்து பால் நிலவும்,
வெட்கி தலை குனியும்
உன் நிறத்தில்!

கன்னத்து குழியழகு
கார்மேக முடியழகு
வண்ணத்தில் நீ இருக்காய்
வானழகு வடிவமடி.
எண்ணத்தில் நீ இருக்காய்
ஜென்மத்தில் நீ வாழ்வாய்!

வில்லழகு நெற்றியிலே
பொட்டழகு மின்னுதடி
வட்டமிட்ட உன்முகம்
பூ அழகு புன்னகையும்
எனைக் கிரங்கச் செய்யுதடி!

ஆண்டுகள் பல கடந்தடி
எண்ணற்ற குறுஞ்செய்தி
கைபேசி சேர்ப்பகமும்
உன் நினைவை சொல்லுமடி!

கவி எல்லாம் நான் எழுத
காதலர் தினமும் வந்ததடி
காலமெல்லாம் காத்திருப்பேன்
சீமாட்டி நான் உன் அருகில்
நான் இருக்க வேண்டுமடி!

கவிஞர் த.ரூபன்
திருகோணமலை – இலங்கை