muungil_arisi40 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும். மூங்கில் பூவிற்குள் அரிசி இருக்கும். இந்த அரிசி பார்ப்பதற்கு கோதுமை போல் இருக்கும். பின்னர் மூங்கில் பட்டுவிடும்.

மூங்கில் அரிசி பற்றி நம்மில் பலபேர் கேள்விப்பற்றிருப்போம், சில பேர் மட்டும் தான் பார்த்திருப்போம், அதில் ஒரு சிலர் மட்டுமே அதை ருசித்திருப்போம்.அந்த ஒரு சிலரில் நாமும் என்பதில் மகிழ்ச்சி.

காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.
மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.

சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.மக்கட்பேறு உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது.பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரணம் .

மூட்டுவலியை குணமாக்கும் மூங்கில் அரிசி கஞ்சி
பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது; முட்டி வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடை பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். மறந்துபோன அந்த மருத்துவ உணவு

மூங்கில் அரிசிக் கஞ்சி ;

தேவையானவை: மூங்கில் அரிசி, நொய் அரிசி – தலா 150 கிராம், சீரகம், ஓமம் – தலா அரைத் தேக்கரண்டி, பூண்டு – 6 பல், சுக்கு – ஒரு துண்டு, நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கு.
செய்முறை: மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்

மூங்கில் அரிசியின் பயன்கள் :

மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது.

உடல் வலிமை பெறும்.

சர்க்கரை அளவை குறைக்கும்.

எலும்பை உறுதியாக்கும்.

நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

அரிசிகளில் சிலவகை இதோ உங்களுக்காக;

கருங்குருவை:
விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.

மாப்பிள்ளை சம்பா:
இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.

கைகுத்தல் புழுங்கல் அரிசி:
low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.

காட்டுயானம்:
ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.

அன்னமழகி:
மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.

இலுப்பைப் பூச்சம்பா:
பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.

கல்லுண்டைச்சம்பா:
இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.

காடைச்சம்பா:
இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

காளான் சம்பா:
உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.

கிச்சிலிச்சம்பா:
பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.

குறுஞ்சம்பா:
பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.

கைவரை சம்பா:
உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.

சீதாபோகம்:
உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.

புழுகுச்சம்பா:
இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.

மணக்கத்தை:
தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.

மணிச்சம்பா:
அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.

மல்லிகை சம்பா:
நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.

மிளகு சம்பா:
உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.

மைச்சம்பா:
வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.

வளைத்தடிச்சம்பா:
வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.

வாலான் அரிசி:
மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.

மூங்கில் அரிசி:
மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.

பழைய அரிசி:
பாலர், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும்,கபமும் குறையும்.
இவை அனைத்தும் அரிசியின் பல வகைகளும், அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளும் ஆகும். இதை கொண்டு உடலுக்கு ஆரோக்கியமானஅரிசியை மட்டும் சாப்பிட்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கைவாழ்வோம்.

சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்…
பொது நலனில் அக்கறை கொண்டவர்கள்


1 Comment

Shri Vasanthi · டிசம்பர் 29, 2021 at 8 h 45 min

பயனுள்ள தகவல்களை கொடுத்தீர்கள். மிக்க நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »