வந்து சென்ற
எல்லா தடயங்களையும்
அழித்தாகி விட்டதென்ற
இறுமாப்பு

உன்
விஷமம் வழியும் விழியும்
நகைக்கும் வதனமும்
மனதில்
நீக்கமற நிறைந்துவிட்டதை
அறிந்ததும் அழிந்தது

தென்றல்
இனிதாய் வீசி
தொட்டுச்சென்ற கணத்தில்.

அது என்ன பார்வை

விழுங்கி விடுவதாய்
தெறித்து விழுவதாய்

எழவே இயலாத வண்ணம்
அமிழ்த்துவதாய்

தவிதவிப்பாய் தத்தளித்து
தத்தளிக்கச் செய்வதாய்

அன்பைப் பொழிவதாய்
காட்சியைக் காண விழைவதாய்

எத்தனை விந்தை செய்கிறது
உன் இரு விழிகளின்
ஒற்றைப் பார்வை

உடல் உறங்க
உள்ளம் உறங்க
உயிரும் உறஙிவிட

உன் நினைவு மட்டும்
பெரும்
ஊழிக்கூத்திடும்.

இரக்க மனத்தில்
ஒளிந்திருக்கும்
அரக்க குணம்

அனிச்ச மனம்
அன்பின் பாரம்தாங்காது
தவிக்க

மனம்
பதைபதைக்க
பரிதவிக்கவிட்டு

பாராமுகமாய்
செல்வாய்.

உயிர்ச்சிலை
எனதாய்
வந்தாய்

உயிரை
விழுங்கிவிடுவதாய்
பார்த்தாய்

உயிரைப்
பறித்துக்கொண்டு
சென்றாய்

உன்
மௌனத்தின் செய்திகளை
அறிந்துக்கொள்ள
உயிரைப் பின் தொடர்ந்து
மனமும் சென்றுவிட்டது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.