மனதில் பெரிதாக ஒரு கீறல்!
மனத்திரை விலகிய நிலையில்
மருண்டு போய் நின்ற கணத்தில்
மாற்றம் வந்து வலியை தந்து விட்டது!
நேற்றைய சத்தமோ, நிசப்த நிலையில்
நேரும் என்று கொஞ்சமும் நினைத்தும் பார்க்காது;
நேசத்தின் தோற்றம் வெறும் ஏமாற்றமாக
நேர கால மாற்றத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியானது
ஆசைகள் ஒவ்வொன்றும் ஆற்றோடு அடியுண்டு
ஆதரவு தேடிய வெளிச்சமும் அணைந்து இருட்டில்
ஆழமும் அறியாமல், போகும் திசையும் தெரியாமல்
ஆரவாரம் எல்லாமே அடங்கி ஒடுங்கிய நிலையில்
வேண்டும் காட்சிகளை மாற்ற வழி தெரியவில்லையே …
வேஷம் போடும் மனித வாழ்க்கையா இது …
வேற்று கிரகம் ஒன்றை தேடிச் சென்றாவது
வேண்டிய வாழ்க்கை வாழ வரம் வேண்டுமே!
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா Read more