விடையைத் தேடி விடியலைத் தேடி
…… வாடிடும் ஏழைகள் வாழ்வினைப் பார்.!
விரைவாய் வந்ததோ மே தினமும்
…… விடிவினை வேண்டுதே நம் மனமே.!

உழைப்பவர் போற்றி உயர்வு பெற
…உலகம் போற்றும் இத் தினமே.!
பிழைக்கும் மக்கள் படுந்துயர்ப் போக்க
…… தழைக்கச் செய்து துயர்த் துடைப்பாய்.!

உலகெங்கும் தொழிலாளர் உயர்வு கண்டு
…… உள்ளம் மகிழுந்து உலாவர வேண்டும்.!
ஏற்றம் அடைந்து மாற்றம் பெற்று
…… ஏழ்மை இன்றி எழிலாக வேண்டும்.!

உழைப்பெனும் உளியால் உலகை செதுக்கி
…… உயர்த்திடும் மக்களும் உயர்ந்திட வேண்டும்.!
வியர்வைத் துளிகளை விலையாகக் கொடுத்து
…… விளைப்பொருள் தருவோர் வாழ்ந்திட வேண்டும்.!

இலக்குகள் நோக்கிய இன்பப் பயணத்தில்
…… இன்னல் தவிர்த்து இனிதாக வேண்டும்.!
இயந்திரமாய் உழைப்பில் இயங்கிடும் மக்களை
…… இறையாய் நினைத்து இன்புற வேண்டும்.!

உழைக்கும் வர்க்கமே உலகினில் கடவுள்
…… பிழைப்பை சுரண்டாது போற்றிட வேண்டும்
மாசறியா உழைப்பவர் மனதினில் மகிழ்வும்
…… வீசிடும் தென்றலாய் வித்திட வேண்டும்.!

தேனினிய விடியலை தேடித்தரும் தொழிலாளர்
…… வண்ணமிகு நற்கனவும் வளம்பெற வேண்டும்!
திண்ணமுடன் எண்ணங்கள் திசையெங்கும் மலர்ந்து
…… எண்ணமிகு வாழ்வும் எழில்பெற வேண்டும்.. வாழ்த்துகள்.!

 


1 Comment

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · மே 1, 2020 at 14 h 44 min

இனிய வணக்கத்துடன் நல்வாழ்த்துகள் தமிழ்நெஞ்சம் ஆசிரியர் சகோதரர் அவர்களுக்கு, மிகுந்த மகிழ்வுடன் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

மரபுக் கவிதை

யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே
இதயம் தொட்ட உறவுகள் எங்கே
இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே
இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…?

தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே
தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே
ஓடி யாடி உழைத்த….தெல்லாம்
தேடியும் பார்த்தேன் தெரியவில்லை.

 » Read more about: யாசக வாசலிலே…  »

புதுக் கவிதை

காடுகள்

காடுகள் – நம்
வாழ்விடத்தின் கடைகால்கள்
ஆனால்… நாம்
தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.

காடுகள் – நம்
உயிர்வளி சேமிப்பகங்கள்
ஆனால்… நாம்
செலவழித்து கொண்டிருக்கிறோம்.

 » Read more about: காடுகள்  »