யாளிகள் பற்றி 2010 ல் தணிகை குமார், மணி எழுதிய நாவல் பலதரப்பிடம் இருந்து நன்மதிப்பைப் பெற்றது. யாளி மிருகத்தை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றி சுவரசியமாக பல செய்திகளுடன் வெளியடப்பட்டது. யாளி பற்றிய பலருக்கு அறிமுகமும், இதுபோல் ஏன்..? இதுவரை எழுதவில்லை… ஆங்கில படங்களுக்கு நிகராக ஒரு புனைக் கதையை நம்மால் ஏன்..? உருவாக்க முடியவில்லை… என, கேள்வி கேட்டது அந்த புத்தகம்.
அந்த புத்தகத்தின் முன்னுரை இவ்வாறு தொடங்குகிறது…
“இந்த பூமியில் சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் வாழ்ந்ததாக அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. இந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் இத்தகைய விலங்குகளை பின்னணியாகக் கொண்டு உலகில் பல திரைப்படங்கள் வெளிவந்து உலக மக்களை பெருமளவில் கவர்ந்தன.
ஆனால்? பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. தென் இந்தியாவில் காணப்படும் இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் ஒரு பிரமாண்ட விலங்கின் உருவத்தை சிலைகளாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
இந்து புராணத்தில் சொல்லப்படும் எந்த செய்தியும் இதுவரை ஆன்மீகமாக மட்டும் இருந்ததில்லை. விமான வடிவமைப்பு, நவகிரகங்கள் பற்றி வானியல் சாஸ்திரங்கள், முனிவர்களின் அசாத்திய சக்திகள் அனைத்தும், அறிவியலின் படி சாத்தியம் என அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது…
நாம் கடவுள் என நம்புவோர்கெல்லாம் ESP (Extra sensory perception) சக்தி இருந்திருக்கலாம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. முதலில் சந்தேகித்து பின்னர் உலகம் ஏற்றுக்கொண்ட இந்திய தத்துவங்கள் எத்தனையோ உண்டு (யோகா போன்றவை)
தேவர்களின் தலைவனாக இந்திரனின் வாகனமான ஐராவதம் பற்றி நாம் அறிவோம். வெள்ளை நிற யானை பல துதிக்கைகள் அல்லது பல தந்தங்கள் கொண்டது போல, அதன் தோற்றம் இருக்கும். ஆரம்பத்தில் மேற்கத்திய உலகம் ஐராவதத்தை ஒரு புனைவு மிருகமாக கூட ஏற்கவில்லை ஒரு முக்கிய எலும்பு படிவத்தின் கண்டுபிடிப்பு வரை. Gomphothere எனப்படும் இந்த அழிந்துவிட்ட யானை இனவிலங்கின் தலைபகுதியில் நான்கு தந்தங்கள் இருந்தன. இந்த விக்கி தளத்தை படியுங்கள்…
Gomphothere பற்றிய முழு விக்கிபீடியா பதிப்பிலும் இந்திய புராணம் பற்றியோ ஐராவதம் பற்றியோ ஒரு சொல் கூட இல்லை(??). ஒருவேளை, யாளியின் தடயங்கள் கூட இன்னோரு கண்டத்திலோ, அல்லது முறையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், இந்தியாவிலேயோ கண்டுபிடிக்கப்படலாம்…
“The Hindu religion is the only one of the world’s great faiths dedicated to the idea that the Cosmos itself undergoes an immense, indeed an infinite, number of deaths and rebirths.
It is the only religion in which the time scales correspond to those of modern scientific cosmology. Its cycles run from our ordinary day and night to a day and night of Brahma, 8.64 billion years long. Longer than the age of the Earth or the Sun and about half the time since the Big Bang.”
Carl Sagan, Cosmos
யதார்த்தம்:~
~~~~~~~~~
நாம் வாழும் யதார்த்த உலகிலிருந்து யோசித்தால், இப்படியேல்லாம் ஒரு மிருகம் இருக்க வாய்ப்பேயில்லை, அப்படியே இருந்தாலும் அதனால் நமக்கென்ன கிடைக்கப்போகிறது. இந்த எண்ணம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு தான்..!
அதே நேரத்தில், அப்படி ஒரு உருவத்தை ஏன் உருவாக்க வேண்டும்? அவை நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற படைப்பாற்றலின் மிச்சங்கள்.
ஒரு சாதாரண மனிதனின் கனவில் வந்த கொடிய மிருகமாய் கூட இருக்கலாம்,ஆனால் அவன் தன் அச்சத்திற்கு அளித்த உருவமே யாளிகலாகிருக்கலாம். யாளிகள் வெறும் சிலைகள் அல்ல… நம் முன்னவர்களின் எண்ணற்ற கற்பனை, மற்றும் படைப்புகளை நினைவு படுத்தும் ஸ்துபிகள்.
சற்று சிந்தித்து பாருங்கள், சுஜாதா,ஜெயமோகன் போன்றோரின் ஒரு சில புத்தகங்களையும் படங்களையும் தவிர சிறந்த அறிவியல் புனைவுகள் உங்களுக்கு நினைவுண்டா..? நம்மால் ஏன் சிறந்த Sci-Fi, Fantasy கதைகளை உருவாக்க முடியவில்லை.
இன்னமும் Harry potter, Lord of the Rings, கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of thrones), Princess Mononoke போன்ற படைப்புகளை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவே வேறொரு நாட்டில் யாளி படைக்கப்பட்டிருந்தால்..? அவை இறக்கைகள் கட்டிவிடப்பட்டு கொண்டாடப்பட்டிருக்கும். யாளிகளே இந்தியாவின் டிராகன்கள். நாம் தினசரி கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் அவை, நம்மால் பிரம்மிப்பாய் கண்டு களித்து போற்றப்பட வேண்டியவை.
எனவே… இனி வரும் நமது சந்ததியினர்களுக்கு, நமது, கலாச்சாரம், நம்மோடு ஒன்றியே இருக்கும் யாளிகள் பற்றிய, கதை, கவிதை, கட்டுரைகள் புனைந்து, நமது வரலாற்றினை எடுத்தியம்புவது, நமது தலையாய கடமை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »