காலம் கனியுமா
கனவுகள் பலிக்குமா
கவலைகள் கலையுமா
கன்னி மனம் மகிழுமா!!
தண்ணீரில் மீன்
அழுதால் தெரியுமா
கண்ணீரில் போடும்
கோலம் நிலைக்குமா!!
ஊமைக்குயில்
பாடும் ராகம் புரியுமா
ஏழை எனக்கொரு
வாழ வழி பிறக்குமா!!
மனம் மதிக்கும்
மனமொன்று கிடைக்குமா
மணமாலையொன்று
வந்து கழுத்தில் விழுமா!!
என் இளமை
வீணாகியே போகுமா
வயதாகி வாழாது
வாழ்வு பாழா போகுமா!!