மௌனப் புன்னகை
கொட்டிய
உந்தன் வதனத்திலிருந்து
ததும்பி ஓடும்
அன்பின் வாசனையை
அள்ளிக் குடிக்கிறேன்…
அது
நீண்ட சஞ்சரிப்போடு
எந்தன் கரங்களில் நசிபட்டு
என்னைத் தாண்டி
நெடுதூரம் ஓடியது
ஆனந்தச் சாயல்கள்…
விரித்துப் பார்க்கையில்
கொம்புகள் தள்ளி
மடிந்து போன
கனவுகளைச் சேர்த்து
புதுப்பாடம் புகட்டியது
நீதான் எந்தன்
நிழற் படமென.!!!
புதுக் கவிதை
ஒரு கோப்பைத் தேநீர்
ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.
1 Comment
Selvakumari · ஜூலை 6, 2018 at 8 h 48 min
சிறப்பான கவிதை