உண்மைகளுக்குள்
உண்மைகளைத் தோடும் உலகம்
ஊமையாகிப் போன நேர்மைகள்
தோற்றம் அளிக்கின்றன துரோகங்களாக!
பொய்களுக்கு அளிக்கப்படும்
அலங்கார்த்தில் தான்
எத்தனையே அற்புதங்கள்
மெய்கள் இங்கே முதிர்க்கன்னிகளாக
வாய்மை வெல்லும் என்ற வார்த்தைகள்
வாசிப்பதற்கு மாத்திரமே
உள்ளங்களில் ஊன்றப்படும்
உவமைகள் யாவுமே கலப்பு கலந்ததே!
வாழ்வில் சூன்யம் வைத்த மனிதன்
வாழ்க்கையில் மாயம் கண்டான்
ஆறுபது வரை ஆயுளில்
தினம் தோறும் புது
புதுப் வேடங்கள் பூண்டான்
வேதங்களை மறந்து
வேதாந்தம் பேசினான்
இவன் விவேகம் இழந்தான்!
நம்பிக்கை பாத்திரம்
ஒட்டையிடப்பட்ட சாஸ்த்திரத்தில்
பலர் காண நீர் இரைத்தான்
யாரை நம்புவது யாரை நோவது
யாவரும் இப்படியே என்பதில்
ஒற்றுமை மட்டுமே நன்றாய் ஒன்றிப்போனது
ரிம்ஸா டீன் / இலங்கை
9 Comments