காம, மதவெறி பிடித்த
கயவன்களே!

எதை நீ
தேடினாய் -அந்த
எட்டு அகவை
அசிஃபாவிடம்

நீ தூங்க
அவள் தூங்காமல்
இரவு முழுவதும்
உன்னை சாய்த்து
வைத்திருந்த
அந்தத் தோள்களையா?

உன் பசி தீர்க்க

பால் கொடுத்த
அந்த மார்பகங்களையா?

நீ கருவில்
உருவான செய்தி கேட்டு
அன்போடு
உன்னைத் தடவிப்பார்த்த
அந்த வயிற்றையா?

தலையணையாக
மடி தந்த
அந்தத் தொடைகளையா?

அடுப்பங்கரையிலேயே
ஓய்வின்றி
சுழன்று கொண்டிருக்கும்
அவள் கால்களையா?

இல்லை
மாதவிடாய்க் குருதியை சேமித்து
நீ வெளிவரும் நேரம்
கிழிக்கப்பட்ட
அவள் பிறப்புறுப்பையா?

எதை நீ
தேடினாய்
அசிஃபாவிடம்?

சாதியின் பெயரால்,
மதத்தின் பெயரால்,
இனத்தின் பெயரால்,
தொடர்ந்து வன்புணர்ச்சி

எந்த சாதி, மத, இனமானாலும்
சீரழிந்து போவது
பெண்ணினம் தான்

உங்களுக்கான தண்டனை
தூக்கு என்கின்றனர்
அது தீர்ப்பாக இருக்கலாம்

தீர்வு என்பது

அறுக்கப்படட்டும்
நீ அழும் போதெல்லாம்
ஆண் குறி
அப்போதே அடங்கும்
பாலியல் வெறி


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்