புதுக் கவிதை
மனப் பெயர்வு
வாடகை வீட்டில்
வாழ்க்கையைக் கடத்தியது
போதுமென
அடுக்ககத்தின்
புது மனையில் நுழையும்
ஆயத்தப் பணியில்
அனைத்தும் எடுத்து வைத்தாயிற்று
ஏதேனும்
மறந்துவிட்டோமா என
ஒவ்வோர் இடமாய்
கண்களால் துழாவும் வேளை
வாங்கியதில் இருந்து
பூக்காமல்
ஏங்கவைத்த
அந்தச் சாமந்திப் பூச்செடி
அன்றுதான்
மொட்டு விட்டிருந்தது