ஆச்சரியம்! ஆனால் உண்மை!!

எனது ஊரில் என் தோழி சில வருடங்களாக ஒரு மைனாவை வளர்த்து வந்தாள். அதற்கு உணவாக காய்ந்த இறைச்சியை தேனில் இட்டு ஊற வைத்துக் கொடுப்பாள்!!

அவள் வீட்டில் சிறு குழந்தைகள் இரண்டு காலப் போக்கில் குழந்தைகள் போல் இதுவும் தமிழ் பேச கற்றுக் கொண்டது. அத்தோடு தாய் இல்லாத என் தோழிக்கு இது சிறு உதவிகளும் செய்து வந்தது!!

யாராவது வீடு வந்தால் அவர்களை “உள்ளே வாங்கள்!” என்று அழைப்பதும், வந்தவர்களை என் தோழியிடம் சென்று அறிமுகப் படுத்துவதும்.. என்ன பேசுகிறார்கள் என்று கூடவே இருந்து பார்த்து மகிழ்வதும், என் தோழி குழந்தைகளை குளிப்பாட்டினால் சிறு ஆடைகளை கொண்டு வந்து கொடுப்பதும், முடிந்தளவு அதனால் தூக்க இயன்ற பொருட்களை தூக்கி கொண்டு கொடுப்பதும் போன்ற இத்தனை உதவிகளையும் செய்வது மைனாவின் பணி.

ஆனால் இவர் கணவர் சந்தைக்குப் போக வெளியே வந்தால் உடனே அவர் தோளில் “வாப்பா நானும்..” என்று அமர்ந்து கொள்ளும். சில நேரம் அவ்வாறே அழைத்துச் செல்வார்! சில நேரம்.. “நீ பறந்து வா..! என்று சொல்லி விட்டு அவர் போக.. அவர் போகும் பாதையில் இந்த மைனா தானே பறந்து செல்லும்.

இந்தக் காலப் பகுதியில் ஒரு நாள் மழை நேரம் மைனாவை திருடன் ஒருவன் திருடிக் கொண்டு போய் விட்டான்.

இவர் காலை எழுந்து பார்த்ததும் மைனா இல்லை. இவர் ரொம்ப மனம் வேதனைப் பட்டு அழுததால் என்னிடம் நான் ஆறுதல் படுத்தினேன்..!! ” கிடைக்கும்! கவலை வேண்டாம்..!!” என்று.

ஏன் என்றால் அது ஒரு நாளைக்கு பல தடவை அவள் பெயரை சொல்லி அழைக்கும்! ரொம்ப சத்தமாக அது, அதே போல் ஓர் இடத்தில் அழுது கொண்டு இருக்கிறதாக தகவல் வந்தது. உடனே அங்கே போய் கேட்டதும் திருடியவர்கள் கொடுக்க மறுத்தனர். உடனே வேறு வழி இன்றி போலீஸில் முறையிட்டாள்!!

சட்டப்படி மைனா காவல் நிலையம் வந்தது! வந்தும் பயன் தரவில்லை. இருவருமே தன் மைனா என்றே அடமும் பிடிவாதமும் பிடித்ததால்.. நியாயமும், நீதியும் தடுமாறியது!! இரண்டு நாட்களுக்கு பின், இருவரும் நீங்கள் உங்கள் வீடுகளுக்கே சென்று விடுங்கள். நாங்கள் மைனாவைக் கூட்டில் இருந்து திறந்து விட்டு விடுவோம். ! அதற்கு தெ தன்னை உண்மையாக வளர்த்தது யார் என்று தெரியுமாததால் தானே வீடு வந்தால் பெற்றுக் கொள்ளுங்கள். என்று சொல்லி அனுப்பி விட்டனர் போலீஸ் ஸ்டேசனில்.

உடனே எனது தோழி கணவர் “சரி சேர்! அது போதும்! நான் வீடு போகிறேன்..!” என்று சொல்லி பைக்கை தள்ளும் நேரமும் கூடு நிறக்கப் படும் நேரமும் ஒன்றானதால் வாப்பா நானும் என்று வந்து தலையில் உட்கார்ந்ததாம் மைனா.

ஆம்! அப்படி அருமையாக எங்களுடன் ஒரு பாசப்பறவையாக.. அன்புப் பிள்ளையாகவே வளர்ந்து வாழ்ந்து வந்த எங்கள் அழகு மைனா இரு தினங்களுக்கு முன் வயது போய் இறந்து விட்டது..!! என்று கூறி என் தோழி என்னிடம் கதறலுடன் சொல்லும் போது அவளை அணைத்து ஆறுதல் சொல்லத்தான் என்னால் முடிந்தது. இறந்த மைனாவை மனதில் நினைத்து வியந்து மகிழ்ந்தபடியே ..!! பிறந்தது கவிதை!

யார் கற்றுக்கொடுத்தது/
தமிழ் அழகாக பேசுகிறது/
மைனா!


1 Comment

? · செப்டம்பர் 19, 2017 at 15 h 28 min

இனிய நன்றிகள் தமிழ்நெஞ்சம் உங்கள் ஊக்கப்பணி தொடர வாழ்த்துக்கள் இறைவனை வேண்டுகிறேன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..