ஒரு தடவை,
இரு தடவை,
பல தடவைகள் …
கலங்கிக் கலங்கி
தெளிந்தே விட்டேன்!

வேதாளம்
மீண்டும் மீண்டும்
ஏறட்டும் …

முழு இரவும்
என் தூக்கம்
திருடட்டும் …

உலக உருண்டை
இடமின்றி
எறியட்டும் …

பெண்ணல்ல
பேயென்று
பெற்றவளே கூறட்டும் …

காற்றுக்கு வளைந்ததுவும்
நேற்றுக்கள் நனைந்ததுவும்
இன்றோடு முடியட்டும் …

என்னை
நாநாக இருக்க விடு …

எண்றெண்ணி
முடிப்பதற்குள்,
அத்தனை தீர்மானங்களும்
அவசரமாய் கலைக்கப் பட்டன …

அவன்
தந்த
நெற்றி முத்தத்தால் …