” பாட்டியின் சேலை…!
கிழிந்தும் உதவியது
பேரனுக்கு தொட்டில்”
2
குழந்தையை சுமந்தாள்
கூடவே ஒட்டிக்கொண்டது
தாய்மை
3
மலர்ந்தது ரோஜா
பறிக்கும் முன் முத்தமிட்டது
வண்ணத்துப் பூச்சி
4
மரத்தில் குழந்தை சிற்பம்
அணைத்து முத்தமிட்டாள்
குழந்தை இல்லா தாய்
5
புதுமைப் பெண்ணோ
தனிமையில் செல்கிறது
நிலா
6
“நட்சத்திரம் சிரித்ததோ
சிதறிக் கிடக்கிறது
மெரீனாவில் முத்துக்கள்”
7
“பூந்தோட்டம்
பசுமையை மேய்கிறது
விழி”
8
விடியும் வரை எரிகின்றது
அணைக்க யாரும் வரவில்லை
தெருவிளக்கு
9
“ஒட்டுண்ணி தாவரம்
இடமாறியது
நிறமாறிப் பூத்தது கொய்யா”
10
“முறிந்த கிளை
ஊஞ்சல் ஆடுகிறது
குருவிக்கூடு”
1 Comment
ஜவ்வாது முஸ்தபா · மார்ச் 30, 2017 at 16 h 22 min
1..4,5,6,7,10 கவிதைகள் அருமை.
இனிய வாழ்த்துகள்.