ஹைக்கூ

கவிநுட்பத் துளிப்பாக்கள்

1

” பாட்டியின் சேலை…!
கிழிந்தும் உதவியது
பேரனுக்கு தொட்டில்”

2

குழந்தையை சுமந்தாள்
கூடவே ஒட்டிக்கொண்டது
தாய்மை

3

மலர்ந்தது ரோஜா
பறிக்கும்  முன் முத்தமிட்டது
வண்ணத்துப் பூச்சி

4

மரத்தில் குழந்தை சிற்பம்
அணைத்து முத்தமிட்டாள்
குழந்தை இல்லா தாய்

5

புதுமைப் பெண்ணோ
தனிமையில் செல்கிறது
நிலா

6

“நட்சத்திரம் சிரித்ததோ
சிதறிக் கிடக்கிறது
மெரீனாவில் முத்துக்கள்”

 » Read more about: கவிநுட்பத் துளிப்பாக்கள்  »