அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி ..!
சிவந்த வானமாய் அவன் கண்கள் ..!
சினேகிதத்தில் அவன் மடி தவலும் குயில்கள் ..!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழிக்க சவால் விட்டவன் ..!
நிலம் கேட்டு கண்முன்னே காணி
பராசக்தியிடம் கோபம் தொடுத்தவன் ..!
காதல் கசிய விரல்களை வீணையாக்கியவன் ..!
எதிர்த்தடித்து ஏற்றறத்தாழ்வுகளை
இம்மண்ணில் சமம் நிலவ கலகம் பூண்டவன் ..!
காண்போர் கனவு மெய்பட வேண்டுமென குரல் எழுப்பியவன் ..!
தமிழுக்கு தலையணையாய் வாழ மொத்தத்தில் பாஞ்சாலி சபதத்தையே சாட்சியாய் நமக்கு தந்துவிட்டு மகா கவிஞனாக மனதின் அகலாமல் ஆத்மாவோடு வாழ்பவன் இந்த எட்டையபுரத்து
முண்டாசுஅக்கினி கவிக்காரன் ..!
எங்கள் நெஞ்சில் வாழ்கிறாய் பெரும் அக்கினிகுஞ்சாய் ..!
வாழும் உன் புகழ் இப்பிரபஞ்சம் இருக்கும்வரை …
1 Comment