அவர்கள்
தங்களை நல்லவர்கள் போல்
தெரியப்படுத்திக்
கொள்கிறார்கள்??

அவர்களின்
உடல்மொழி
ஒவ்வொரு மனிதர்களிடத்திலும்
இலகுவாக
பொருந்திக்கொள்கிறது?

வெளிச்சத்தை
உமிழ்ந்து
விட்டில்களை உண்ணும்
விளக்குகளைப்போல
அவர்களின் பேச்சு
வன்மத்தை கக்குகிறது??

அவர்களின் பாவணை
காழ்ப்புணர்ச்சிகளால்
சபிக்கப்பட்டு?
குரோதங்களை வெளியுமிழ்ந்து
உத்தமர்கள் போல
பிரதிபலிக்கிறது ?

வாய்ச்சொல்லால்
வாள்வீசும் இவர்கள்
தங்களை
விளம்பரப்படுத்திக்கொள்ள
அங்லாய்க்கிறார்கள்??

உழைப்பை செலுத்தாமல்
ஒரு அசைவையும் புரியாமல்
அங்கீகாரத்திற்காக
அலைந்து திரிகிறார்கள்??

மாட்சிமை பொருந்தியவனே
அவர்களை
எம்மிடத்தில் ஏன்
அறிமுகம் செய்தீர்???
அவர்களின் சுயரூபத்தை
என்னிடத்தில் காட்டிய
உமக்கே என்
முதல் வணக்கம்???


1 Comment

கே.தேன்மொழி தேவி · நவம்பர் 13, 2016 at 5 h 28 min

எம்மிடத்தில் ஏன்
அறிமுகம் செய்தீர்???
அவர்களின் சுயரூபத்தை

அருமை . கை தட்டி பாராட்டினேன். இந்த கேள்வி எனக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்