கரத்திற்கோர் பெருமை
நின் பெயரின் முதலெழுத்தை
முதல் எழுத்தாய்க் கொண்டதால்!

க்கத்தின் திறவுகோல்
நின்னணுக் கரங்களிலும்
மழலைப் புன்னகையிலும்!

ந்திய தேசம் கண்டெடுத்த
விஞ்ஞானப் புதையல் நீங்கள்!

ன்ற வலியும் உதிரமும்
வீணாகவில்லை நின் அன்னைக்கு!
தேசத்தின் விடிவெள்ளியை அல்லவா
ஈன்றெடுத்தாள் அந்தத் தாய்!

ன் வழியில் பயணித்தே
வருகின்றனர் மாணவர் கூட்டம்!
உங்கள் கனவுகளை
நனவாக்கும் நாள் வெகுதூரம் இல்லை!

ருக்கு உழைத்த உத்தமர் நீர்!
உங்கள் பிரிவால்
எங்கள் இதயங்களில் கண்ணீர்!

ங்கள் தந்தையும் நீரே…
எங்கள் தோழனும் நீரே…
மாணவர்களுக்கு மாணவனும் நீரே…
மாற்றானுக்கு ருத்ரன் நீர்!

வுகணை நாயகனே…
நீர் மண்ணில் புதைந்தாலும்
உங்கள் கனவுகள்
நாளும் பிறந்துகொண்டே இருக்கின்றன!

யா நின் காலத்தில்
வாழ்ந்த பெருமை பெற்றோம்…
சரித்திர நாயகனே
உன் சப்தங்கள் இன்னும்
ஓயவில்லை எங்கள் செவிகளில்!

ரு நொடி கூட
ஓய்வாக இருக்கவில்லை !
ஒவ்வோரு நொடியையும்
இந்திய வளர்ச்சியின்
விதைகளாக்கினீர்!

டும் பெட்டகம் நீர்!
ஆம்… துள்ளி ஓடும்
நடமாடும் அறிவுப்
பெட்டகம் நீர்தான் !
கடல்கடந்து பக்தர்களை
பெற்ற தெய்வமும் நீர்!

வியம் (பொறாமை)
அறுத்தவர் நீர்!
குரானோடு கீதையையும்,
பைபிளையும் நேசித்தீர்!

கினியின் பிரம்மன் நீர்!
கனவுகளுக்கும் பலம் உண்டென்பதை
உணர்த்திய ஆசான் நீர்!
நின் பிறப்பு சம்பவமாக இருந்தாலும்
இறப்பு “இனி எவரும்
தொடமுடியா சரித்திரமே”!


2 Comments

குமார் முருகேசன் · அக்டோபர் 16, 2016 at 16 h 30 min

“அ” முதல் “ஃ” வரை எஃகு மனிதரின் புகழ் பாடிய நின் வரிகளுக்கு இத்தோழனின் ஒரு சிறிய வாழ்த்திதுவே…..

வாழ்த்துகள் அம்பிகா…

அம்பிகா குமரன் · அக்டோபர் 16, 2016 at 16 h 31 min

எனது எழுத்துக்களுக்கும் ஓர் அங்கீகாரம்…

என் வாழ்வின் புதுவசந்தமாய் வந்த நட்பின் பரிசு…
நன்றி தோழா குமார்

நன்றி தமிழ்நெஞ்சம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.