கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி

மதுரைத்தாயின் மூத்தமகனே.. கவிதையாய் மனதில் பூத்த மகனே…!!! மஹியும் பேகமும் நபிகளுக்கு பிரியமானவர்களானார்கள் உன்னை ஈன்றதால்… இன்று நபிகளை பிரியமானவராக்கிக் கொண்டாய் மரணத்தை நீ ஈன்றதால்…!! “கவிக்கோ” உன்னைச்சூடி பட்டங்களும் பெருமை பெற்றன.. இன்று உன்னையிழந்து அவையாவும் வெறுமையுற்றன!! சிந்தனைகளின் சிற்பி…. புதுக்கவிதையின் புகழாரம்…. சிலேடை வார்த்தைகளால் பகடையாக்கினாய் எங்கள் மனங்களை… ஆலாபனை தூவி ஆராதித்தாய் நற் குணங்களை…!! “மின்மினிக்கெல்லாம் மேனி திருப்பினால் கப்பல் எப்படி கரை போய் சேரும்”.. Read more

தொடமுடியா சரித்திரமே…

அகரத்திற்கோர் பெருமை நின் பெயரின் முதலெழுத்தை முதல் எழுத்தாய்க் கொண்டதால்! ஆக்கத்தின் திறவுகோல் நின்னணுக் கரங்களிலும் மழலைப் புன்னகையிலும்! இந்திய தேசம் கண்டெடுத்த விஞ்ஞானப் புதையல் நீங்கள்! ஈன்ற வலியும் உதிரமும் வீணாகவில்லை நின் அன்னைக்கு! தேசத்தின் விடிவெள்ளியை அல்லவா ஈன்றெடுத்தாள் அந்தத் தாய்! உன் வழியில் பயணித்தே வருகின்றனர் மாணவர் கூட்டம்! உங்கள் கனவுகளை நனவாக்கும் நாள் வெகுதூரம் இல்லை! ஊருக்கு உழைத்த உத்தமர் நீர்! உங்கள் பிரிவால் Read more