பத்தாம் வகுப்பு
படிக்கையில்
பக்கத்தில்
அமர்ந்திருந்தவளுக்காய்
எழுதிய காதல் கடிதத்தை
அவன் அப்பாவை ?
படிக்க வைத்துப்
பார்த்த முதல் காதல் !

வேலைக்குச் செல்கையில்
ரயில் வண்டியில்
எதிர் இருக்கையில்
இரண்டு வருடத்திற்கும் மேலாய்
அடைகாத்து ?
சொந்த வாகனம் உடையவன்
அறிமுகம் கிடைத்ததும்
பரிதவிக்க விட்டுப்
பறந்துபோன இரண்டாம் காதல் !

மூத்தவன் வலது கையிலும்
இளையவன் இடது கையிலும்
என் விரல்களைக் கோர்த்தபடி
நடந்துகொண்டிருக்க…
கடைக்குட்டியை
அவள் வயிற்றில் சுமந்தபடி
முற்றுப்பெற்ற மூன்றாம் காதல்.

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.