துன்பக் கடலினிலே – நான்
துயர்படும் வேளையிலே!
இன்பமென வருவாள் – என்
எண்ணத்திலே நிறைவாள்!
பாலில் சுவைசேர்த்தே – என்னைப்
பாரடா கண்ணாவென்பாள்!
நூலில் இழைபோல – அவள்
நுண்ணிய அறிவுடையாள்!
பாசக் கடலினிலே – எனக்கொரு
பங்கினை அளித்திடுவாள்!
பாசக் கடலவளே – என்றும்
பளிங்கினும் வெண்மனத்தாள்!