இரை தேடி சென்ற குருவிகள் கூட்டையும்
மரங்கொத்தி பறவையின் அலகு நுனியின் அழுத்தத்தையும்
எறும்புகள் ஊர்ந்த வழியையும்
நிழலுக்காக ஒதுங்கிய மனிதனின் ஏக்கத்தையும்
நூற்றாண்டுகளுக்கு மேல்
பிரசவித்த கோடி இலைகளையும்
லட்சம் மலர்களின் வாசங்களையும்
காய் கனிகளின் சுவைகளையும்
மண் சுமக்கயிருந்த சருகுகளுக்கான கனவுகளையும்
அந்நிலத்தின் வெற்றிடத்தையும்
மரத்தை வெட்டி சாய்த்த மரவெட்டியவனின் வேர்வையையும்தான்
உங்கள் வீட்டு முற்றத்தில் நாற்காலியாய் கிடத்தி
கோப்பையில் ஏதையோ நிரப்பி அருந்தி கொண்டிருக்கிறீர்கள்
அவையனைத்தும் என்னை நோக்கி அமர்ந்திருப்பதை
கவனிக்காதிருக்கிறீர்கள்
கவனிக்காதவரை குற்றவுணர்வின்றிக் குடியிருங்கள்…
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா Read more