அன்பு நுரைத்தெழுகையில்,
ஆணவம் அழிந்து
இன்பம் பிறக்கிறது!

அன்பை உணர்கையில்,
உலகமே சிறுத்து
உள்ளங்கை பந்தாய்!

அன்பை சுவாசிக்கையில்,
மண்ணை நேசித்து
பெண்மையும் சிறக்குதே!

அன்பு சுற்றிவளைக்கையில்,
ஆனந்த ஊற்றாய்
இல்லம் திகழ்ந்திடுமே!

இருள் ஒழிந்து,
ஆகாயம் வெளுப்பதால் – வாழ்க்கை
அன்பினால் …!