ஒரு உண்மை இராணுவ வீரர்கள் கதை.

நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு! நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்…

ஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டு இருந்தார்கள்.

மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும்,  இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப் படுத்தியது.

இந்த நேரத்தில், யாராவது ஒரு ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது. ஆனால், அது ஒரு வெற்று ஆசை என அறிந்தும்.

அவர்கள் பொருட் படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு பாழடைந்த ஒரு சிறிய கடை போல் தோற்றம் கொண்ட ஒரு வடிவை கண்டார்கள்.. அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது..
ஆனால் பூட்டால் பூட்டப் பட்டிருந்தது..

“அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை” ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம்..  நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கோம்…என்றார் மேஜர்..

அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார். சார், இது ஒரு தேனீர் கடை தான்..உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும்.  நாம் பூட்டை உடைக்கலாமே… என்றார்.

இது ஒரு தர்ம சங்கட நிலை அவருக்கு.  தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா என்று குழம்பினார்.

சிறிது நேரம் கழித்து, அவர் மனதை விட அவரின் அறிவு ஜெயித்தது. வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னார்.

அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே ஒரு தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டும் இருந்தது.

எல்லோரும் தேனீர், பிஸ்கெட் நன்றாக அனுபவித்து புறப்பட தயாராகினார்கள்..

நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் பிஸ்கெட் உண்டோம்.  நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல. இது ஒரு சூழல். நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள். இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க, அவர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து, அந்த கவுண்டரில் இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை மூடி விட்டு, தன் குற்ற உணர்ச்சி துறந்து, புறப்பட்டார்.

அடுத்த மூன்று மாத காலத்தில் அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்குள்ளாக்கூடிய அந்த இடத்தில் பணியாற்றி, யாருக்கும் உயிர் சேதம் வராமல் இருக்க, அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.

அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை,,ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது. அதன் முதலாளியும் இருந்தார்.

ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச் சொன்னார்.

எல்லோரும் தேனீர் பிஸ்கெட் உணடு களித்தனர்.

அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.

அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது. மிகவும் நிறைந்த நெஞ்சுடன் கடவுள் பக்தியும் இருந்தது.

என் மதிப்பிற்குரிய நண்பர் திரு.சாருஹாசன் போன்ற எண்னம் கொண்ட ஒரு வீரர் கேட்டார். ஹே தாத்தா… கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உன்னை இப்படி இங்கே இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்?

அப்படி சொல்லாதீர்கள் மகனே… கடவுள் நிச்சயம் இருக்கிறார். அதற்கு என்னிடம் சான்றே இருக்கு.

மூன்று மாதம் முன்பு, சில தீவிரவாதிகளால், ஒரு விஷயம் தேவைப்பட்டதால் எனது மகன் மிகவும் அதிக தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டான். நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன். அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை.

தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை. என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது..

கடவுளிடம் கதறி அழுதேன். ஐயா கனவாங்களே , கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார். நான் அழுது ஆற்றிக் கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது. என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன்.

அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது.

உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது..
கடவுள் இருக்கிறார்..என்றும் இருக்கிறார்.. இதை விட என்ன சொல்ல..
என்று முடித்தார் அவர்..

அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது..

அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன.
அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை அவர்கள் உணர்ந்தார்கள்.

அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.

அந்த முதியவரை தழுவிக்கொண்டு, ஆம் தாத்தா, எனக்கும் தெரியும். கடவுள் இருக்கிறார்… தாத்தா… உங்கள் தேனீர் மிக அபாரம். இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஒரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை.

இதில் இருக்கும் உண்மை என்ன என்றால்?

நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்…என்பதே…

இது ஒரு இராணுவ வீரரால் சொல்லப்பட்ட உண்மை கதை… மார்க்கம் கூப்வாரா செக்டார் காஷ்மீர் பகுதி.

அன்பின் வடிவே தேசமாகட்டும்…
தேநீர் குடிக்கலாம்…
ஒரு உண்மை இராணுவ வீரர்கள் கதை.

நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு… நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்…

ஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டு இருந்தார்கள்.

மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் , இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப் படுத்தியது.

இந்த நேரத்தில், யாராவது ஒரு ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது. ஆனால், அது ஒரு வெற்று ஆசை என அறிந்தும்.

அவர்கள் பொருட் படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு பாழடைந்த ஒரு சிறிய கடை போல் தோற்றம் கொண்ட ஒரு வடிவை கண்டார்கள். அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது. ஆனால் பூட்டால் பூட்டப் பட்டிருந்தது..

“அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை” ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம்.  நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கோம் என்றார் மேஜர்.

அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார். “சார், இது ஒரு தேனீர் கடை தான்..உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும்.  நாம் பூட்டை உடைக்கலாமே…” என்றார்..

இது ஒரு தர்ம சங்கட நிலை அவருக்கு. தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா என்று குழம்பினார்.

சிறிது நேரம் கழித்து, அவர் மனதை விட அவரின் அறிவு ஜெயித்தது. வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னார்.

அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே ஒரு தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டும் இருந்தது..

எல்லோரும் தேனீர், பிஸ்கெட் நன்றாக அனுபவித்து புறப்பட தயாராகினார்கள்..

நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் பிஸ்கெட் உண்டோம். நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல.. இது ஒரு சூழல்.. நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள். இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க, அவர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து, அந்த கவுண்டரில் இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை மூடி விட்டு, தன் குற்ற உணர்ச்சி துறந்து , புறப்பட்டார்.

அடுத்த மூன்று மாத காலத்தில் அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்குள்ளாக்கூடிய அந்த இடத்தில் பணியாற்றி, யாருக்கும் உயிர் சேதம் வராமல் இருக்க, அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.

அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை. ஆனால், இப்பொழுது அது திறந்திருந்தது. அதன் முதலாளியும் இருந்தார்.

ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச் சொன்னார்.

எல்லோரும் தேனீர் பிஸ்கெட் உண்டு களித்தனர்.

அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.

அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது. மிகவும் நிறைந்த நெஞ்சுடன் கடவுள் பக்தியும் இருந்தது.

என் மதிப்பிற்குரிய நண்பர் திரு.சாருஹாசன் போன்ற எண்னம் கொண்ட ஒரு வீரர் கேட்டார்… ஹே தாத்தா… கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உன்னை இப்படி இங்கே இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்… என்று.

அப்படி சொல்லாதீர்கள் மகனே..கடவுள் நிச்சயம் இருக்கிறார்..அதற்கு என்னிடம் சான்றே இருக்கு..

மூன்று மாதம் முன்பு, சில தீவிரவாதிகளால், ஒரு விஷயம் தேவைப்பட்டதால் எனது மகன் மிகவும் அதிக தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டான். நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன்.. அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை.

தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை. என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது..

கடவுளிடம் கதறி அழுதேன்.. ஐயா கனவாங்களே , கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார். நான் அழுது ஆற்றிக் கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது, என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன்.

அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது..

“உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது. கடவுள் இருக்கிறார். என்றும் இருக்கிறார். இதை விட என்ன சொல்ல..” என்று முடித்தார் அவர்..

அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது.

அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன..
அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை அவர்கள் உணர்ந்தார்கள்..

அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.

அந்த முதியவரை தழுவிக்கொண்டு, “ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்..கடவுள் இருக்கிறார்… தாத்தா… உங்கள் தேனீர் மிக அபாரம்… “இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஒரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து  டிக்கண்களும் பார்க்க தவறவில்லை..

இதில் இருக்கும் உண்மை என்ன என்றால்?

நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்…என்பதே..

இது ஒரு இராணுவ வீரரால் சொல்லப்பட்ட உண்மை கதை. மார்க்கம் கூப்வாரா செக்டார் காஷ்மீர் பகுதி.

அன்பின் வடிவே தேசமாகட்டும்…


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »