உறவுகள்
உன்னதம் கூட்டும்
உடைகள்.
அந்த ஆடைகளில்
அதிகக் கிழிசல்கள்.
தகுந்த நேரத்தில்
உகந்த உதவியாய்
உயிர்த்தெழாத உறவு
துரோகத்தின் பிரதிபலிப்பு.
அது
கண்ணாடி மனதில்
கல் எரியும்
கயமைத்தனம்.
உதவாத உறவுகள்
உயிரற்ற பிணங்கள்.
அவர்கள்
மழைப் பொழிந்தால்
வெள்ளமாய் உயிரெடுக்கும்.
உடன் இருந்தால்
கடன்
கடலுக்குள் மூழ்கடிக்கும்.
உதவாத உறவுகளின் வசம்
உதடுகளில் அமுது.
உள்ளங்களில் விசம்
இருப்பது நிசம்.
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா Read more