vanappuபசுந்தளிர் வனப்புடன்
பரவசம் தந்த அந்த
பச்சை மரத்தவள்
பட்டுப் போய் பாவியாய் நிற்கிறாளே
பரிதாபமாய்

வண்ணமலர்களை அழகாக மலரச் செய்தவள்
வாசம் நேசம் தந்து
வாழ்வும் கொடுத்தவள், இன்று
வாடி வதங்கிய நிலையில்
நின்று, நிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தியவள்
நிலையாமையின் பிடியில்
நிலை தடுமாறி
நிர்க்கதியாய் நிற்கிறாள்

அவள் விதைகளில் உதித்த அவள் செடிகள்
ஆற்றாமையின் வலி தெரியாது
ஆணவத்துடன் கேலி செய்து கூத்தாடுவது
அடடா, இது நியாயமா ?

கருணையில் கனிந்து, கனிகளாய் ஈந்து
கருத்தோடு கவனமாய் காத்திட்டவள்
கவலையோடும் கண்ணீருடனும்
காத்திருக்கிறாள்

பட்ட இடத்தில் தான் படும்
பட்ட மரத்தில் வெட்டுகள் விழும்
பழிகளை சுமந்தபடி விதியையும் நொந்தப்படி
பார்த்திருக்கிறாள்
பசுமையை தொலைத்த
பட்டுப்போன மரமாய்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.