க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள், இலக்கியம் பேணும் இதழ்களிலும், வெகுஜன பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களில் ஓவியம், நடனம் குறித்த இவரின் கட்டுரைகளும், இவை தொடர்பான பல விமரிசனக் கட்டுரைகள் வெகுஜன பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. மொழிபெயர்ப்பையும் விட்டு வைக்காத இவர் ஒரு சகலகலாவல்லி. எழுத்தில் ஆளுமை பெற்றிருக்கும் இவர் நகைச் சுவையுணர்வுடைய, இளமையோடு உறுதியும் கொண்ட எப்போதும் இருபது வயதைத் Read more

‘திசைகள்’ மாலன்

திசைகள் என்னும் இணையப் பத்திரிக்கை ஆசிரியர் திரு.மாலன் பன்முகம் கொண்டவர். இந்தியா டுடே (தமிழ்) தினமணி, குமுதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இப்போது சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.அமெரிக்காவில் உள்ள புளோரிடா பலகலைக்கழகத்தில் இதழியல் படித்தவர். அங்கு படிக்கும் போது advanced editing என்ற பாடத்தில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேறியவர். செய்தி தொடர்பான பணிகளுக்கு நடுவே, இலக்கிய ஆர்வத்துடன் எழுத்தாளர்களையும், இளம்பாடகர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நேர்காணல்கள் Read more

கவிதாயினி இளம்பிறை

கவிதை என்ற பெயரில் நிறைய வெளி வருகின்றன. அவை கவிதைகளா என்பது சிந்தனைக்குரியது. ஆனால், அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதும்போது கவிதைப் போக்குகள் சிலவற்றை நாம் காணலாம். சுமாராக எழுதத் தொடங்கிப் பட்டை தீட்டப்பெற்று மிகச் சிறப்பான கவிதைகள் எழுதுவோர் உண்டு. இது, ஏறுவரிசை. மிகச் சிறப்பாக எழுதத் தொடங்கி, அடுத்தடுத்த படைப்புகளில் அந்தச் சிறப்பைத் தொட முடியாமல் சுமாராகத் தேய்வோர் உண்டு. இது, இறங்குவரிசை. ஒருவகைக் கட்டமைப்பில் ஒரே மாதிரி அலைவரிசையில் சிலர் எழுதுவர். இது, தொடர்வரிசை. பொதுவாக மோசமாகவும் திடீரென நல்ல கவிதைகளும் சிலர் எழுதுவ துண்டு. இது, லாட்டரிச் சீட்டுப்போல. எப்போதாவது தான் பரிசு விழும். இதற்குக் கவிஞரின் திறமை காரணமில்லை. வசமாக வந்து மாட்டிக்கொள்ளும் சொற்களே காரணம். இந்த வகைகளில் இளம்பிறையை முதல் வகையில் சேர்க்கலாம்.