திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85

பாடல் – 85 எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும் ஒள்ளிய ஒற்றாள் குணம். (இ-ள்.) எள்ளப்படும் – (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, மரபிற்று ஆகலும் – முறையை உடையதாதலும்; உள் பொருளை – (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தை, கேட்டு மறவாத – கேட்டுப் பின் மறவாத, கூர்மையும் – கூரறிவுடைமையும்; உள் பொருள் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 84

பாடல் – 84 வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத் தாய்முலை யுண்ணாக் குழவியும் சேயமரபில் கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர் நல்குரவு சேரப்பட் டார். (இ-ள்.) வாய் – நீர் வரும்வழி, நன்கு அமையாக் குளனும் – நன்றாக அமைந்திராத குளமும்; வயிறு ஆர – தன் வயிறு நிரம்பும்படி, தாய்முலை உண்ணா – தாயின் முலைப்பாலை உண்ணாத, குழவியும் – குழந்தையும்; சேய் மரபில் – உயர்ந்த முறைமையில், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 83

பாடல் – 83 உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும் நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும் செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும் செப்ப நெறிதூரா வாறு. (இ-ள்.) உப்பின் – உப்பினது, பெருங்குப்பை – பெரிய குவியல், நீர் படியின் – தன்னில் நீர் படிந்தால், இல் ஆகும் – இல்லாமற் போகும்; நட்பின் கொழுமுளை – நட்பினது செழித்த முளையானது, பொய் வழங்கின் – பொய்யாகிய நெருப்பைப் பெய்தால், இல் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 82

பாடல் – 82 சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும் தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் – பாய்ந்தெழுந்து கொள்ளாருட் கொள்ளாத கூறாமை இம்மூன்றும் நல்லான் வழங்கும் நெறி. (இ-ள்.) சான்றாருள் – (நற்குணங்களால்) நிறைந்தவரிடத்தில் சான்றான் எனப்படுதல் – நற்குணங்களால் நிறைந்தவன் என்று கருதப்பட நடத்தலும்; எஞ்ஞான்றும் – செல்வம் உற்ற காலத்தும் அற்ற காலத்தும், தோய்ந்தாருள் – (ஒருதன்மையராய்) நட்புக் கொண்டு கலந்தவரிடத்து, தோய்ந்தான் – நட்புக்கொண்டு கலந்தவன், எனப்படுதல் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 81

பாடல் – 81 தோள்வழங்கி வாழும் துறைபோற் கணிகையும் நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர் ஆசைக் கடலுளாழ் வார். (இ-ள்.) துறைபோல் – (பலருக்கும் பொதுவாய் நின்று தன்னிடத்து நீரைக் கொடுக்கும்) துறையினைப் போல, தோள் வழங்கி – (பலருக்கும் பொதுவாய் நின்று) தனது தோளைக் கொடுத்து, வாழும் – வாழ்கின்ற, கணிகையும் – வேசையும்; நாள் – ஒவ்வொரு நாளும், கழகம் பார்க்கும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80

பாடல் – 80 முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து. (இ-ள்.) முறை செய்யான் – முறையறிந்து செய்யமாட்டாதவன், பெற்ற – அடைந்த, தலைமையும் – தலைமைத் தன்மையும், நெஞ்சில் – மனத்தில், நிறை இலான் – உறுதிப்பாடு இல்லாதவன், கொண்ட – மேற்கொண்ட தவமும் – தவமும்; நிறை ஒழுக்கம் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 79

பாடல் – 79 பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால் கொண்ட அருந்தவம் விட்டானும் – கொண்டிருந் தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர் நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய். (இ-ள்.) பழி அஞ்சான் – (உலகம் பழிக்கும்) பழிப்புக்குப் பயப்படாமல், வாழும் – உயிர் வாழ்கின்ற, பசுவும் – பசுப்போல்வானும்; அழிவினால் – கேடு வந்த போது, கொண்ட – (தனக்கு உரித்தாகக்) கொண்ட, அருந்தவம் – அரிய தவத்தினை, விட்டானும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 78

பாடல் – 78 தூய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும் வாய்மை யுடைமை வனப்பாகும் – தீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும் தவத்தில் தருக்கினார் கோள். (இ-ள்.) தூய்மை உடைமை – மனத் தூய்மை யுடையராயிருத்தலும்; துணிவு ஆம் – (மெய்நூல்களாலே) துணியப் பட்ட, தொழில் – நற்செய்கையை, அகற்றும் – விரிக்கின்ற, வாய்மையுடைமை – உண்மையுடையவனாயிருத்தலும்,வனப்பு ஆகும் – மங்கையருடைய அழகாகிய, தீமை – தீமையைத் தருவதனை, மனத்தினும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 77

பாடல் – 77 கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் – தெள்ளி வடுவான வாராமல் காத்தலிம் மூன்றும் குடிமா சிலர்க்கே யுள. (இ-ள்.) கயவரை – கீழ்மக்களை, கையிகந்து – கைவிட்டு (சேராமல்,) வாழ்தல் – வாழ்தலும்; நயவரை – நீதியுடையவரை, நட்டு – நட்புச் செய்து, நள் இருளும் – நடு இரவிலும், கைவிடா – கைவிடாமல், ஒழுகல் – (அவருக்கு இணங்க) நடத்தலும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 76

பாடல் – 76 மாரிநாள் வந்த விருந்தும் மனம்பிறிதாய்க் காரியத்திற் குன்றாக் கணிகையும் – வீரியத்து மாற்றம் மறுத்துரைக்குஞ் சேவகனும் இம்மூவர் போற்றற் கரியார் புரிந்து : (இ-ள்.) மாரிநாள் – மழைக்காலத்தில், வந்த விருந்தும் – வந்த விருந்தினரும், மனம் பிறிதாய் – தன் மனம் வேறொன்றிற் சென்றும், காரியத்தில் – பொருள் வருவாயினை மேற்கொள்ளுதலில், குன்றா – குறைவுபடாத, கணிகையும் – வேசையும்; வீரியத்து – (போரில் Read more