திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 90
பாடல் – 90 ஈதற்குச் செய்க பொருளை அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை – யாதும் அருள் புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும் இருளுலகம் சேராத ஆறு. (இ-ள்.) பொருளை – செல்வத்தை, ஈதற்கு – பிறருக்குக் கொடுக்கும் பொருட்டு, செய்க – தேடக்கடவன்; அறம்நெறி – அறத்தின் வழியில், சேர்தற்கு – சேரும் பொருட்டு, பெரும் நூலைச் செய்க – பெருமையாகிய நூற்பொருளைக் கற்கக் கடவன்; யாதும் சொல்லை Read more
