அழகான கண்ணிமைகளில் …
அழுகைப்பூ பூத்திருக்கு !…
விட்டுச்சென்ற உறவுகளெல்லாம் …
விண்ணிலே பூத்திருக்கு !…
தனித்த வெண்ணிலவாய் …
வெள்ளிகளின் மத்தியிலே ..
உண்ணா நோன்பிருந்து ..நீ ,
உடல் வருத்தி லாபமென்ன ?…
சத்தியமாய் பாதைமாறா …
உத்தமியாய் வாழ்ந்திருந்தாய் !…
சங்கோஜம் நிறைந்தவளாய் …
செல்வியாய் வளர்ந்திருந்தாய் !..
எதற்குமே குறைவில்லை …
எண்ணி மனம் பூரித்திருந்தாய் !..
இடைக்கால தடைபோல ..
இடிமுழக்கம் கேட்டதம்மா !…
மின்னலும் வெட்டி ,வெட்டி ..
மழை பெய்து ஓய்ந்ததம்மா !…
எல்லார்க்கும் எல்லாமும் ..
எப்போதும் நிறைவதில்லை !..
நிறைவான எல்லாமும் ..
நின்றொன்னும் நிலைத்ததில்லை !..
நீ மட்டும் விதிவிலக்கா ?..
நிறைவடைந்து வாழ்ந்து செல்ல ?…
கண்மணியே கலங்காதே !..
உன்தாயாய் நானிருப்பேன் !…
என் உயிர் மூச்சு உள்ளவரை !..
என் உயிர் பிரிந்து போகும்வரை !..
எனக்கே அம்மாவாய் நீயிருந்தாய் ..பழைய கதை !
உனக்கும் அம்மாவாய் நானிருப்பேன் ..புதிய கதை !..


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

கன்னியின் கண்ணீர்

காலம் கனியுமா
கனவுகள் பலிக்குமா
கவலைகள் கலையுமா
கன்னி மனம் மகிழுமா!!

தண்ணீரில் மீன்
அழுதால் தெரியுமா
கண்ணீரில் போடும்
கோலம் நிலைக்குமா!!

 » Read more about: கன்னியின் கண்ணீர்  »

மரபுக் கவிதை

காமத்தின்  கண்பறிப்போம்

மலராத  மொட்டதனின்  இதழ்கி  ழித்து
       மதுவுண்ட   வண்டொன்றைப்  பார்த்த  துண்டா
புலராத  இரவுக்குள்  புணர்தல்  போன்று
       புரிந்திட்டார்   வன்செயலைக்  கயவர்  சில்லோர் !

 » Read more about: காமத்தின்  கண்பறிப்போம்  »