பாடல் – 40

வெகுளி நுணுக்கம் விறலு மகளீர்கட்
கொத்த வொழுக்க முடைமையும் – பாத்துண்ணும்
நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றுந்
தொல்லறி வாளர் தொழில்.

(இ-ள்.) வெகுளி – (தம் இடத்து எழுந்த) சினத்தை, நுணுக்கும் – சுருங்கச் செய்யும், விறலும் – வலிமையும்; மகளீர்கட்கு – பெண்கட்கு, ஒத்த – இசைந்த, ஒழுக்கம் – நடையை, உடைமையும் – உடையரா யிருத்தலும்; பாத்து உண்ணும் – பகுத்து உண்ணுதற்குக் காரணமாகிய, நல் அறிவு ஆண்மை – நல்லறிவை ஆளுந்தன்மையில், தலைப்படலும் – கூடுதலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், தொல் அறிவு ஆளர் – பழைமையாகிய நூலறிவை ஆளுதலுடையவர், தொழில் – செயல்களாம்; (எ-று.)

(க-ரை.) எழுந்த சினத்தை அடக்குதலும், பெண்களுக்கு வயப்படாமலும், அவர்களால் வெறுக்கப்படாமல் நடத்தலும், தக்கார்க்குக் கொடுத்துத் தானும் உண்கின்ற நன்மையோ டிருத்தலும் இன்றியமையாதன.

நுணுக்கும் : நுணுக்கு என்னும் வினையடியாகப் பிறந்த பிற வினைப் பெயரெச்சம். தன் வினைப் பகுதி – நுணுகு. விறல் : தொழிற்பெயர்; விற : பகுதி. அல் : விகுதி. தொல்லறிவு : தொன்மை + அறிவு. தொன்மை – பழைமை. ஒத்த ஒழுக்கமாவது தன்சொற்கு இசைந்து நடக்கும்படி செய்தலும் அவரோடு இசைந்து இன்புற்றிருத்தலுமாம்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »