நில்லாமல் ஓடும் நிரந்தர விளையாட்டுக்காரி
———- சொல்லாமல் சுணங்காமல் காரியமாற்றுபவள்
இல்லாதது இருப்பது என்ற வேறுபாடறியாள்
———- பொல்லாதது என சொல்பவரையும் ஏற்பாளே

கெட்ட பெயரும் கிட்டும் நல்ல பெயரும் வரும்
———- பட்டப் பெயராய் பொற்காலம் கேடுகாலமென்பர்
திட்டமிட்டபடி செய்ய இயலாதவர் பழியுரைப்பர்
———- வட்டமடித்துத் திரும்ப வராததுதான் கொடுமை

வசந்த காலம் வலம்வரும் காதலர்க்கு இனிதாம்
———- கசந்த காலமோ தோல்வியில் உழல்பவர் ஏசவே
அசராது ஓடுபவர் காலத்தோடு ஓடலாம் மகிழ்வே
———- மசமச என சோம்பல்கொண்டோர் பின்தங்குவரே

காலம் பொன்னைவிட மதிப்புமிக்க மாணிக்கம்
———- கோலம் மாறாது கொள்கையில் பிடிப்பானதது
ஞாலமே காலத்தைச் சார்ந்தே நடைபயில்கிறதே
———- பாலமாய் காலச் சக்கரத்தை இயக்கி விடுகிறதே

ஒவ்வொரு நொடியும் உன்னதமான புகழேணி
———- அவ்வொரு நொடி போனால் மீண்டு அது வராதே
வெவ்வேறு காலங்கள் விரைந்தே போய்விடுமே
———- ஒவ்வாத செயல்கள் செய்யாது கூட நடப்போமே

நல்லன செய்து நலம்பெற கொடுத்துதவி உலகில்
———- அல்லன நீக்கி அன்புலகில் அரவணைப்போடு
இல்லறம் நடத்தி இன்பம் காணலாம் காலத்தோடு
——– சொல்லறம் கொண்டு சிறப்பாக்குவோம் காலத்தை.

Categories: கவிதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

எழுகின்ற விடியல்

எழுகின்ற விடியலிலே இனிமை வேண்டும்
      ஏரியிலே தூயதண்ணீர் ஓட வேண்டும்
உழுகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும்
      உணவினிலே விடங்கலக்கா தர்மம் வேண்டும்
இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும்
 

 » Read more about: எழுகின்ற விடியல்  »

குடும்பம்

சிறுவர்கள் உலகம்

சிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும்
சாதனை படைக்கும் தனி உலகம்
வறுமையின் துயரம் உடன் விலகும் – புது
வசந்தங்கள் தந்தே பூ மலரும்!

இது மழலைகள் பருவம்
சின்ன நிலவுகள் உருவம் – என்றும்
பாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே…

 » Read more about: சிறுவர்கள் உலகம்  »

அஞ்சலி

காகிதப் பதிப்பக கண்மணி வாழி !

அஞ்சலி

ஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்
      அகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை,
காகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்
      காண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி,

 » Read more about: காகிதப் பதிப்பக கண்மணி வாழி !  »