படிதாண்டாப் பத்தினியாய் அடுப்புக் குள்ளே
—– பகலிரவும் அடியாளாய்ப் பணிகள் செய்தே
அடிவுதைகள் ஏளனங்கள் பட்ட போதும்
—– அழுகையினைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு
கடிவாளக் குதிரையாகச் சுமையி ழுத்துக்
—– கல்லெனினும் புல்லெனினும் கணவன் என்றே
படிப்பின்றி இருந்தநிலை மாறிப் போகப்
—– பட்டத்தால் பகுத்தறிவு பெற்றா லின்று !

எண்ணத்தில் வலிமையின்றி இருந்த பெண்ணோ
—– எழுச்சிப்பா பாரதியின் புதுமைப் பெண்ணாய்க்
கண்ணீரைச் சிந்திமூலை அமர்ந்தி ருந்த
—– காட்சிமாற்றி எழுந்திட்டாள் துணிச்ச லோடே
தண்ணீரில் எதிர்த்துநீந்தும் மீனைப் போலத்
—– தரையினிலே அடக்குமுறை எதிர்த்து வென்று
விண்மீதில் பறக்கின்றாள்! விவேகத் தோடு
—– விதைக்கின்றாள் சாதனைகள் துறைகள் தோறும் !

தட்சணையால் முதிர்கன்னி ஆன தெல்லாம்
—– தகர்த்தெறிந்து எதிர்வினாவால் பணிய வைத்தாள்
பட்டுக்கும் பொன்னுக்கும் கையை ஏந்திப்
—– பணிந்தநிலை மாற்றிபணம் ஈட்டு கின்றாள்
கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை ஏற்றுக்
—– கண்வியக்க அதிகாரம் செலுத்து கின்றாள்
கட்டுடையும் நீர்க்குமிழி போலி ருந்த
—– காலம்போய் உடையாத குமிழி யானாள் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »