இந்த பூமிக்கு
இரண்டே இரண்டு
தேவதைகள்தான் …
இன்று நீ
நாளை நம் மகள் …

உன் வீட்டின்
வாசலிலிருந்துதான்
தொடங்குகிறது
என் உலகம் …

நீ எங்கெல்லாம்
கூழாங்கற்களை அள்ளி வீசுகிறாயோ
அங்கெல்லாம் சலசலத்து
ஓடத் தொடங்கும் நீரோடை …

வணங்கச் செல்லுமுன்
தெப்பக்குளத்தில்
கால் நனைக்கிறாய் …

கரையில் இருப்பவர்களிடம்
விரைந்தோடி உன் அழகை
தமுக்கடிக்கின்றன நீரலைகள் …

கோவிலுக்கு நீ வரும்
அழகை பார்ப்பதற்காகத்தான்
கோபுரத்தின் மேல்
ஏறி நிற்கின்றன சிலைகள்…

ஊரிலுள்ள விடலைகள்
எல்லாம் கிரிகெட்டை
மறந்துபோனார்கள் …
நீ தாயம் விளையாட
ஆரம்பித்ததிலிருந்து …!


5 Comments

Nisha Thurai · ஜனவரி 15, 2017 at 18 h 45 min

என் கவிதை பிரசுரமாகியிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி.
மிக்க நன்றி Tamil Nenjam

Victor J. Rajakili · ஜனவரி 15, 2017 at 23 h 21 min

தாயம் விளையாடுவதை நிறுத்த சொல்லுங்க
விடலைகள் கிரிக்கெட்டை மறக்காமலிருக்க..
அருமை வரிகள் 👍

பாமா-இ · ஜனவரி 16, 2017 at 16 h 58 min

உன் வீட்டின்
வாசலிலிருந்துதான்
தொடங்குகிறது
என் உலகம் …

பெயரிலி · ஜனவரி 16, 2017 at 22 h 43 min

இந்த பூமிக்கு இரண்டே இரண்டு தேவதைகள்தான் … இன்று நீ நாளை நம் மகள் … great line…. and true poem

சுபி நரேந்திரன் · ஜனவரி 17, 2017 at 8 h 30 min

சிறப்பான கவிதை. // கோவிலுக்கு நீ வரும்அழகை பார்ப்பதற்காகத்தான்ப கோபுரத்தின் மேல் ஏறி நிற்கின்றன சிலைகள // நல்ல கற்பனை வரிகள். வாழ்த்துக்கள் நிஷா,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்