கோட்டுப்பூ
கோர்த்தெடுத்து
கூந்தலில் சூடிவிட்டு
மணம் மாறும் முன்
மனம் மாறிப்போனாய்
தொலை தேசம் வாழ்வை
தொலைத்த தேசமானது
பிரிவு கொடுத்துப்போனவன்
பிரிவின் வலியை
கூட்டிப்போக மறந்தாய்
சண்டிகை இரவுக்கு நம்
அட்சயத்தின் தீராக்கூடலின்
வெளிச்சத்தை உணவளிப்போம் வா!
யாரையும் விட உனையே
அதிகமாய் நேசிக்கிறேன்
என்கிறாய் யாரை விட
எனக்கேட்பதிலேயே
எனதன்பு கிறங்கிப் பேசும்
சப்தங்களின் உள்ளிருக்கும்
நிசப்தத்திலே உன் அன்பின் ஆழம்
நான் சொல்வதற்கெல்லாம்
எதிர்பதம் சொல்பவன் நிச்சயம்
எதிரிலே பதம் மறப்பாய் !!!.


1 Comment

லதா நாகராஜன் · நவம்பர் 15, 2016 at 11 h 20 min

ஆழ்ந்த நன்றியும் நெஞ்சாந்த நேசங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் நெஞ்சம் பகுதியில் எனது கவிதையை வெளியிட்டமைக்கு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்