அறிமுகம்
இராம வேல்முருகன்
கல்வித்தகுதிகள்
- BSc Zoology
- MSc Zoology
- BEd biology
- History
- BLIS library science
- MLIS.
கல்வித்தகுதிகள்
வசிப்பிடம். இந்தியாவில் உள்ள தமிழகத்தின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் .
வணிகவியல் பட்டதாரி.
பள்ளி படிக்கும் காலங்களில் இருந்தே கவிதைகள், கதைகள்,
» Read more about: அனுராஜ் »
பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன்,
» Read more about: வலைக்குள் மலர்ந்த வனப்பு »மலேசியாவில் ஆரம்ப காலங்களில் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். இப்பொழுது ஒரு நல்ல கம்பெனியொன்றில் பணி புரிகிறேன். அப்பணியை மகிழ்வாய் செய்கிறேன். எனது தொழில், எனது தமிழிலக்கியப் பணிக்கு எந்த வகையிலும் இடையூறாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள - தமிழ், தமிழ் - சிங்கள மொழிபெயர்ப்புக்களைப் பொறுத்தவரையில் அவை இன்னுமின்னும் அதிகரிக்கப்படவும் செம்மைப்படுத்தப்படவும் பரவலாக்கப்படவும் வேண்டும். இதுவரையும் வந்துள்ள இலக்கிய மொழிபெயர்ப்புகளில் அனேகமானவை போர் மற்றும் போருக்குப் பின்னான நிலைமைகளை வெளிக்கொணரும் வகையிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போரின் அவலங்கள் குறித்துச் சிங்கள மக்களும் அறிய வேண்டும் என்ற முனைப்பு தமிழ் எழுத்தாளர்களிடமும், தமிழ் எழுத்தாளர்களின் துயரங்களை நாமும் விளங்கித்தான் உள்ளோம் என்ற உணர்வுத் தோழமையை வெளிப்படுத்தும் உந்துதல் சிங்கள எழுத்தாளரிடையேயும் இருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதில் ஐயமில்லை.
இயற்கையையும் அதனோடு இணைந்து வாழ்க்கையையும் விட்டு நாம் விலகிச் செல்வதும், இன்றைக்குப் பல்வேறு வகைகளில் சிக்கல் மிகுந்ததாய் அமைந்துவிட்டதுமான நமது வாழ்க்கைமுறையும் என்னைச் சலனப்படுத்திக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் அனைத்து வகையான சிக்கல்களுக்கும் அன்பு ஒன்றே நிரந்தரத் தீர்வு எனவும் நான் நம்புகிறேன். காமம் இன்றிக் காதல் எவ்வாறு இல்லையோ அவ்வாறு குடும்பம், உறவுகள் இன்றிச் சமூகம் இல்லை. இந்த வரம்பிற்குள் இருந்து தான் வெள்ளிவீதியாரும், ஆண்டாலும் பாடினார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
அன்னை தெரசா அவர்களை கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு துறவி என்று மட்டுமே பார்ப்பவர்கள் உண்டு. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை என்பதுதான் அவரது நோக்கமாக இருந்ததே அன்றி, மதம் மாற்ற வேண்டும் என்ற குறுகிய நோக்கில் அமைந்ததே இல்லை. அவர், தன் வாழ் நாளில் எவரையும் மதம் மாற்றவில்லை, அது தன் நோக்கமும் அல்ல என்பதை பல முறை தெளிவுபடுத்தியும் இருக்கிறார். “மனிதர்களை மனித நேயம் உள்ளவர்களாக மாற்றிட வேண்டியதுதான் முக்கியம்” என்று அவர் சொல்லி இருக்கிறார். அவரது சேவையைப் பெற்றவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர் சேவையைத் தொடங்குவதற்கு அரசால் ஒதுக்கப்பட்ட இடம் இராமகிருஷ்ண பரமஹம்சர் பணியாற்றிய கோயிலின் மிக அருகாமையில்தான் அமைந்திருந்தது.
மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் கோயம்புத்தூரிலிருந்து ஷில்லாங் வரை சுற்றிப் படித்துள்ளேன். அப்பாவின் வேலை அப்படி. திருச்சியில் சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் BSc Physics பட்டம் பெற்றேன். இரண்டாம் மொழியாகப்படித்த தமிழை ஏழாம் வகுப்பிலேயே விட்டுவிட்டு வடமாநிலங்களில் ஹிந்தி படித்து, பிறகு மதிப்பெண்ணிற்காக கல்லூரியில் சம்ஸ்கிருதம் படித்தேன். தமிழே படித்திருக்கலாம் என்று பலமுறை எண்ணிக் கொள்கிறேன் இப்போதெல்லாம்.
விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின.
» Read more about: கவிதாயினி மதுமிதா »
கலையரசன் கந்தசாமி, சுருக்கமாக கலை கந்தசாமி புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்தவர். புதுவை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு கடந்த 14 வருடங்களாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவத்தில் மென் பொருள் வல்லுனராக பணி புரிந்து வருகிறார்.
» Read more about: குறள் தமிழ்ச் செயலி உருவான கதை »