எனக்குள் நீ …!
உனக்குள் நான் ..
இருவருமே வாழ்வில் ..
இரண்டறக் கலந்திருக்க ..
இடையிலெதற்கு இடர்கள் ..!
எனக்கு நீ ஆடை ..!
உனக்கு நான் ஆடை ..
இருவருமே ஓராடை ..இது
இறைவனின் தீர்ப்பாணையே ..!
இந்த உண்மையில் சுகம்தானே ..!
கணவன் மனைவியாய்
கரம்பிடித்தோம் களிப்பாகி !
காலத்தின் நகர்விலே ..
கைவிரிக்கோம் வெறுப்பாகி ..!
கசந்து போன வாழ்க்கையாய் !
கண்களில் தெரிவதேனோ .. இன்று
கண்ணீரில் நனைந்து நின்று ..
காவியம் வரைவதேனோ ..?
உள்ளத்தின் ஒவ்வாமை வாழ்வின்
உணர்வுகளை சிறையடைக்கும் ..
எண்ணமோ ஐயுறவானால் வாழ்வோ !
எரித்திடும் அனலியாய் மாறும் ..!
சந்தேகச் சகதியில் நீ
சறுக்கி விழுந்திடாதே !
சகதி சரியாகிவிடும். .
சந்தேகமோ .. வாழ்வை ..
சருகாக்கி விடும் ..!
உள்ளங்கள் இணைவதால் !
உணர்வுகள் உயிர்பெரும் ..
கன்னம் சிவந்திட வாழ்வில்
களிப்பும் வளம்பெறும் ..!
வீழ்ந்து எழுவோம் கணவனிடம் ..!
விட்டுக் கொடுப்போம் மனைவியிடம்
தட்டிக் கொடுப்போம் இருவருமே !
தரணி போற்றும் எம் வாழ்வுதனை ..!