வெட்கத் தாழ்
போட்டு நாணுகிறேன்!
கனவுகளில்
துகிலுரித்து
பார்க்கிறாய்!
கவலைகள்
கடிணங்கள்
எதுவுமில்லை!
மழலையாய்
உன் மடியில்
மலர்கின்றேன்!
இரகசிய கனவுகளின்
ரகசியம் பூட்டுகின்றேன்!
விழிகள் வழியே
தெறித்து ஓடுகிறாய்!
புலன் இன்பங்கள்
பொய்படும்!
மெய் அன்பு
ஞான பிரபஞ்சத்திற்கு
வழி விடும்!
புனிதனே
புரவியில் வந்து
அள்ளிச் செல்லு!
நெடு மலை
அருவி அடிவாரம்
பள்ளி கொள்ளு!
விடிந்திடும் முன்னே
விடை பெற்றுச் செல்லு!
கனவில் வந்ததை
கவிதையில் சொல்லு!