இந்த பூமிக்கு
இரண்டே இரண்டு
தேவதைகள்தான் …
இன்று நீ
நாளை நம் மகள் …

உன் வீட்டின்
வாசலிலிருந்துதான்
தொடங்குகிறது
என் உலகம் …

நீ எங்கெல்லாம்
கூழாங்கற்களை அள்ளி வீசுகிறாயோ
அங்கெல்லாம் சலசலத்து
ஓடத் தொடங்கும் நீரோடை …

வணங்கச் செல்லுமுன்
தெப்பக்குளத்தில்
கால் நனைக்கிறாய் …

கரையில் இருப்பவர்களிடம்
விரைந்தோடி உன் அழகை
தமுக்கடிக்கின்றன நீரலைகள் …

கோவிலுக்கு நீ வரும்
அழகை பார்ப்பதற்காகத்தான்
கோபுரத்தின் மேல்
ஏறி நிற்கின்றன சிலைகள்…

ஊரிலுள்ள விடலைகள்
எல்லாம் கிரிகெட்டை
மறந்துபோனார்கள் …
நீ தாயம் விளையாட
ஆரம்பித்ததிலிருந்து …!