விமான நிலையத்தில் இருந்து கனத்த இதயத்துடன் புயலால் பூமி கண்ட பூவைப்போல் காரில் விழுந்தான் ஆனந்தன்

நண்பனின் பிரிவு….. பதினைந்து வருடம் கழித்து ஆனந்தனை பார்ப்பதற்காக மட்டும் அமேரிக்காவிலிருந்து சென்னை வந்த பால்ய நண்பனுக்கு கேன்சரின் ஆரம்பம். “சொர்கத்தில் சந்திப்போம்” என்று அழுது பறந்தான்.

அடுத்த ஐந்து நிமிட கார் பயனத்தில் ஜன்னல் வழியே வந்த தென்றல் அவனை தாய் போல் தொட்டு ஆறுதல் சொன்னது.

பயணிக்கையில் அங்கே ஒரு கார் ஓரமாக நிற்ப்பதை பார்த்தான் ஆனந்தன். காரின் டயர் மாற்ற முடியாமல் வயதான் ஒரு ஓட்டுனர் தனிமையில் தோல்வி காண்கிறார்.

காரை நிறுத்தி அவனது இளைஞனான ஓட்டுனரிடம் அந்த வயதான ஓட்டுனருக்கு உதவச் சொன்னான். “ஐயா அவர் எனது மாமானார்” என்று ஓடிச்சென்று உதவி செயதான் ஓட்டுனர்.

மாமனாருக்கு உதவி செய்வதன் நடுவே ஓட்டுனர் ஓடி வந்து “ ஐயா அந்த காரிலே மேடம் உட்காந்திருக்காங்க. அவங்க தான் என் மாமனாரின் முதலாளி அம்மா, ரொமப் நல்லவங்க” என்றான்.

திடீரென்று மொபையிலில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

“எனது பெயர் விஜயா. உங்களின் உதவிக்கு மிக்க நன்றி. உங்களின் மொபையில் எண் எனக்கு தந்த உங்களின் ஓட்டுனரை தயவாக கோபப்பட வேண்டாம்”

அந்த செய்தி ஆனந்தனை மௌனமாக்கியது. பதில் அனுப்ப வேண்டுமா, வேண்டாமா என்று குழம்பியது மனம். வேண்டாம் என்றது நாகரீகம்.

Excuse me.. என்ற ஒரு பெண்ணின் இனிய சத்தம் அவனது கண்களை திறக்க கார் கதவைத் திறந்து அவன் வெளிவந்ததும், “ நான் தான் விஜயா” என்று அறிமுகம் செய்தாள்.

“வணக்கம், நான் ஆனந்தன்” என்றான். இரண்டு நிமிடப்பேச்சில், நீங்கள்… திரு என். ஆனந்தன் தானே என்றாள்.ஆம்..நான் என்.ஆனந்தன் தான் என்றான். கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் தான் இருவரும் என்று உண்ர்ந்து கொண்டார்கள்.

நண்பர்களின் விவரங்கள், ஆசிரியர்களின் தகவல்கள் போன்ற பல மலரும் நினைவுகள். அவ்வப்போது கடந்து போன வண்டிகளின் வெளிச்சம் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள உதவி செய்தது.

கார் பழுது பார்ப்பதின் தாமதம் கண்டு விஜயா பொறுமையிழக்க அவளின் காரை ஓரம் போட உத்தரவிட்டாள். ஓட்டுனர்கள், மாமாவும் மருமகனும் ஆட்டோவில் பறக்க ஆனந்தனும் விஜயாவும் பத்து நிமிட ஆனந்தனின் கார் பயணத்தில் விஜயா வீட்டில்.

புன்னகையுடன் வரவேற்றார் விஜயாவின் கணவர். “ நீங்க நல்லாப் பாடுவீங்க என்று விஜயா சொல்லியிருக்கா” .. என்று துவங்கி ஆனந்தனைப் பற்றிய ஒரு பாராட்டுப் பட்டியல் கண்டு அதில் அவரின் அறியாமையை சகித்தான்.

உறங்கிக் கொண்டிருக்கும் விஜயாவின் மகளுக்கு ஒரு முத்தம் கொடுத்தான். “நலலாயிருக்கேன். சொந்த பந்தங்கள் யாரும் இங்கு இல்லையே என்ற கவலை மட்டும் தான். அப்பா, அம்மா மற்ற எல்ல சொந்தங்களும் ஊரில்” என்றாள் விஜயா.

“Guest is not a pest herre” என்று சமாதானித்தான் ஆனந்தன்.

“நீங்க பழைய நண்பர்கள். பேச நிறைய விஷயங்கள் இருக்கும். பேசிக்கிட்டிருங்கள் என்று புன்னகையோடு Good Night என்று சொல்லி விஜயாவின் கணவர் செல்ல அவரின் நாகரீகம் கண்டு அதிசயித்தான் ஆனந்தன்.

எண்ணங்களில் இருவரும் கல்லூரி மாணவர்களானார்கள். விஜயா ஆசைப்பட்ட பல பாடல்களில் ஒன்றை ஆனந்தன் பாடினான்.

“உறவுகள் சிறுகதை
உணர்வுகள் தொடர்கதை…” என்ற பாடல்.

ஆனந்தன் ரசித்துப் பாடி முடித்து கண் திறந்ததும் கண்ணீருடன் பாராட்டினாள் விஜயா. உணமை தான் ஆனந்தன் உணர்வுகள் தொடர்கதை தான் என்று சொன்னாள்.

ஆனந்தன், உங்களின் திருமணம் எப்படி காதல் திருமணமா அல்லது பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்டதா என்றாள். இரண்டுமில்லை ஒருவருக்கொருவர் திருமணத்திற்கு தேர்ந்தெடுத்தோம் அவ்வளவு தான் என்றான் ஆனந்தன்.

இடது கரத்தின் மோதிர விரலில் ஆனந்தனின் மனைவியின் பெயரை அந்த மோதிரத்தில் வாசிக்க சொன்னான். படித்து விட்டு “பாக்கியம் பண்ணவங்க உங்க மனைவி. கோபமில்லாத பாடகர் கணவர்” என்றாள்.

அவளைத் திருத்தி விட்டு உணமையில் அவன் யார் என்று விளக்கினான். “தன்னையே குறை சொல்லும் முதல் ஆண் நீங்களாகத் தான் இருக்க வேண்டும்” என்றாள் விஜயா பாராட்டின் பார்வையுடன்.

இருவருக்கும் உணவு கொண்டு வந்தார்கள் விஜயாவின் சோறு போடும் தெய்வம், வயதான கருத்தம்மா. உணவு முடித்ததும் விஜயா குழ்ந்தை போல் கேட்டாள், “ஹிந்தி கஜல் பாடல்கள் பிடிக்குமா ?, எனக்கு ரொம்ப பிடிக்கும்” -. அதிசயத்தில் சிரித்தான் ஆனந்தன்.

அதை புரிந்த விஜயா ஒரு கஜல் பாட்டை பாட டேப் ரிக்கர்டருக்கு கட்டளையிட்டாள். அந்த இனிய பாடலின் அர்த்தம்:

“காதலிக்கு நான் அனுப்பின கடிதத்திற்கு பதில் வந்தது. ஆனால் அது ஒரு ரோஜாப்பூ. உனது காதலின் சம்மதத்தை ரோஜாப்பூ சொன்னது. நீ அனுப்பின ரோஜாவை வருடிய போது அறிந்தேன் நீ எவ்வளவு மென்மையாணவள் என்று. உன்னை முள்ளிலிருந்து காப்பாற்ற இதோ வருகிறேன்”

அந்த இனிய ஹிந்தி கஜல் பாடலின் அர்த்தம் விஜ்யாவிடம் ஆனந்தன் சொல்ல சொல்ல அவள் அவன் முகத்தையே வாசிக்க அவனோ அந்த பாடலில் கரைந்து கொண்டிருந்தான்.

“என்.ஆனந்தன், ஒரு உண்மை சொல்லட்டுமா? கல்லூரியில் படிக்கும் காலத்தில் நானும் ஒரு ரோஜாப்பூ எடுத்து உங்களுக்கு அனுப்ப ஆசைப்பட்டேன். ஆனால் உங்களின் படிப்பின் தீவிரம் என்னை தடுத்தது” என்றாள்.

அவளது மல்லிகைப்பூ, அவன் விலகினாலும் தொட்டு தொட்டுப் பேசும் களங்கமில்லா அவளின் நேசம், குளிர்ந்த கரங்கள், அழகிய சிரிப்பு.. இவையெல்லாம் அவளின் காதல் நிஜம் தான் என்று ஆனந்தனின் இதயத்திற்கு சொல்ல கட்டியணைத்து ஒரு முத்தமிட உள்மனம் ஆணையிட்டும் நாகரீகம் அறிவோடு வந்து இருவரையும் கட்டுக்குள் அடக்கி, “ நல்ல நண்பர்கள், ஆனால் திருமணம் முடிந்தவர்கள்” என்று உணர்த்திய பொழுது அவர்கள் நிஜத்திற்கு வந்தார்கள்.

காதலை வெளிப்படுத்திய சந்தோஷம் விஜயாவிற்கு. காதலிக்கப்பட்டேன் என்ற மகிழ்ச்சியில் ஆனந்தன்.

“சொர்கத்தில் சந்திக்கலாம்” என்று சொன்ன நண்பனின் பிரிவின் கவலையை மாற்றத வந்த ஒரு தேவதை தான் விஜயா என்று ஆனந்தன் மகிழ்ந்தான், சமாதானப்பட்டான்.

ஒரு கண்ணில் கண்ணீரும் மறு கண்ணில் சந்தோஷமும் கலந்து எப்படியோ வீடு சேர்ந்தான் ஆனந்தன். தனது மனைவியிடம் நடந்ததெல்லாம் சொன்னான்.

இன்று விஜயாவின் முதல் ஸ்நேகிதி ஆனந்தனின் மனைவி
மனைவியின் முதல் ஸ்நேகிதி விஜயா!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..