பூமிக்குப் போதாத காலம்!
ஒன்றும் புரியாமல்
அமர்ந்திருந்த
என்னிடம் வந்து..!
பூமி தன் உள்ளங்கையைக்
காண்பித்தது..!

நேரம் நன்றாக இல்லையாம்  –  நான்
கைரேகை பார்த்து
பலன் சொல்ல வேண்டுமாம்..!

பூமி பாவமென்றுக் கருதி
உள்ளங்கையைப்
பிடித்துப் பார்த்தேன்..!

பூமத்திய ரேகை உத்தமம்..!
அட்ச ரேகை பட்சமாய்
இருக்கிறது..!
தீர்க்க ரேகையினால்
ரோகமில்லை..!

ஆ….. இதென்ன..!

பூமிக்கு ஆயுள் ரேகையைக் காணவில்லை..!

ஆமாம்..!
ஆயுதம் பிடித்து
ஆயுதம் பிடித்து
பூமிக்கு அழிந்திருக்கிறது
ஆயுள் ரேகை..!

வாருங்கள்..!
வாருங்கள்..!
இந்த பூமியின் ஆயுதம்
முழுவதையும் உருக்கி எடுப்போம்..!

இப்பூமிக்குப் புதிதாய்
ஆயுள் ரேகை ஒன்றை
அமைத்துக் கொடுப்போம்..!!


1 Comment

சா.சையத் முகமது · டிசம்பர் 30, 2016 at 15 h 46 min

அருமையான கவிதை… தோழமையே…
பெருமையாக இணைத்ததற்கும் மகிழ்ச்சியே…
திறமைதனை ஊக்குவிக்கும் உங்கள் திறமையே
நிரந்தரமாய் பயணிக்க ஆசை யதிகமானதே!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்