கணவரும், மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டிவியில் கிரிக்கெட் ஓடிக்
கொண்டிருந்தது. அப்போது தனது சந்தேகங்களை
கணவரிடம் கேட்டாள் மனைவி.
அந்த உரையாடல்..
மனைவி: “இப்ப பேட்டிங் பண்றவர் தான் சச்சினா”?
கணவர்: “சச்சின் ரிட்டயர்ட் ஆகி ரொம்ப நாளாச்சு”.
மனைவி: “ஓ அப்டியா… அங்க பாருங்க இன்னொரு
விக்கெட் விழுந்துடுச்சு”.
கணவர்: “ஏற்கனவே நடந்ததை திரும்பக் காட்டுறாங்க”..
மனைவி: “இந்தப் போட்டில நிச்சயமா ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும்னு நினைக்குறேன். நீங்க என்ன நினைக்குறீங்க”?
கணவர்: “போட்டியே வெஸ்ட் இண்டீஸுக்கும்,
பாகிஸ்தானுக்கும் தான் நடக்குது”…
மனைவி: “அப்படியா… இன்னும் எத்தனை ரன் எடுக்கணும்? ஜெயிக்கிறதுக்கு”?.
கணவர்: “36 பந்துல 72 ரன்”…
மனைவி: “அப்போ ரொம்ப ஈஸியா ஜெயிச்சிடலாம் போல, ஒரு பந்துக்கு ரெண்டு ரன் எடுத்தாப் போதுமே”…
(பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கணவர் டிவியை ஆப் செய்து விட்டு எழுந்து சென்று விடுகிறார்..
இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல், டிவியை ஆன் செய்து சீரியல் பார்க்க ஆரம்பிக்கிறார் மனைவி.
இதைக்கண்டு எரிச்சலடைந்த கணவர் மனைவியை வெறுப்பேத்த நினைக்கிறார் கணவர்).
கணவர்: “இதுல நடிக்கிற ஹீரோயின் பேரென்ன”?.
மனைவி: “சீரியல் பார்த்துட்டு இருக்கேன்ல, என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க”…
(இதுக்கு மேலயும் கேள்வி கேட்க அந்த கணவருக்கு
தைரியம் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்…!!!)
******
LADY : சார்! என் கணவரை காணம் சார்.
POLICE : கடைசியா அவர எப்போ பாத்தீங்க??
LADY : ரெண்டு நாளைக்கி முன்னாடி இட்லி மாவரைக்க கடைக்கி போனாரு.இன்னும் வீட்டுக்கு வரல சார்.!
POLICE : இரண்டு நாள் ஆச்சா?? அப்போ, இரண்டு நாளா என்ன பண்ணீங்க?
LADY : சப்பாத்தி சுட்டு சாப்பிட்டேன் சார்.
ஆசிரியர்: ‘சூரியன் மேற்கே மறையும்’ இது நிகழ்காலமா, எதிர்காலமா, கடந்தகாலமா?
மாணவன்: அது ‘சாயங்காலம்’
ஆசிரியர்: ????