தன்னம்பிக்கை
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்…! அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது, அவனது வழக்கம்…! ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில், ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார். அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பிய போது, தலையில் அடிபட்டு இரத்தம் வந்துவிட்டது….!! கோபம் கொண்ட அரசர், பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்து வர செய்து, தூக்கிலிடும்படி கட்டளை பிறப்பித்தார்…! பிச்சைகாரன் சிறிதும் கலங்கவில்லை…! கல கலவென சிரிக்கத் தொடங்கினான்…! Read more
உறங்காத உண்மைகள்
உறங்காத உண்மைகள் – சிறுகதைத் தொகுப்பு கண்ணோட்டம் : ஜெஸ்மி எம்.மூஸா கல்முனைப் பிரதேசத்தில் இருந்து சிறுகதைகள் வெளிவருதல் என்பது புதிய விடயமல்ல. இலங்கையின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் தென்கிழக்குப்பிரதேசத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் கல்முனையை விடுத்து எம்மால் இத்துறை பற்றிப் பேசமுடியாது. சிறுகதையின் தோற்றம் எப்போது ஆரம்பித்ததோ அப்போதிருந்து அதற்குக் கணிசமான அளவு பங்காற்றியவர்கள் எம்மவர்கள். சிறுகதை Read more
புத்தனைத் தேடும் போதிமரங்கள்
கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்களின் “புத்தனைத் தேடும் போதி மரங்கள் ” என்ற கவிதை நூல் ஒரு பார்வை… – கவிமதி சோலச்சி, புதுக்கோட்டை தமிழ்கூறும் நல்லுலகில் எண்ணற்ற நூல்கள் மலை போல் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் கவிதை நூல்கள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன என்பதில் ஒருபோதும் ஐயமில்லை. காரணம் கணக்கில்லாமல் கவிஞர்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றனர். இதை தமிழுக்கு கிடைத்த பெருமையாகவே நான் கருதுகின்றேன். புரட்சிகளின் பிறப்பிடமாய் போர்க்களமாய் திகழ்ந்த Read more
குதிரையாளி
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் கூட்டரங்கில் மஹாகவி ஆசிரியர் வதிலை பிரபா வாசித்த குதிரையாளி நூல் ஆய்வுரை: ●●● குதிரையாளி சிங்க முகம் கொண்ட கற்பனை விலங்கு. குதிரையைப் போன்று கடிவாளம்கொண்டு வீரன் ஒருவன் அமர்ந்திருப்பதால் அது குதிரையாளி என்று அழைக்கப் பட்டிருக்கலாம். குதிரையாளி யானையை தன் பலத்தால் தாக்கிக் கொல்லும் காட்சி கண்டு பராக்கிரம பலம் கொண்ட புலியே நடுங்கும் என்பர். இது கற்பனை விலங்கு. எனவே இதைத் Read more








