தென்றல் கவியை ஆண்டு விழாக்கள் கவியரங்கங்களில் அவ்வப் போது சந்திப்ப துண்டு. அவரது இயற்பெயர் யாதென அறியேன். அவரது தாயார் ஒரு சிறந்த கவிஞர். அவரது கவியரங்கத்தலைமை கண்டு வியந்து போயிருக்கிறேன். இவரது கவிதைகளிலும் அந்த தாக்கம் ஆங்காங்கே தெரியும். இவரது கவிதை நூல் ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அந்த கவிஞர் தென்றல் கவி (தமிழ்ச்சிட்டு) அவரது புத்தகத்தின் பெயர் தென்றலின் தேடல்கள்.

அட்டைப்படம் வெகு அருமை; நமை உள்ளே சென்று படிக்கத் தூண்டும் வண்ணம் அட்டையை வடிவமைத்துள்ள நண்பர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அட்டை மட்டுமல்ல ஒவ்வொரு பக்கமும் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. நமது புத்தகமும் இவ்வாறு இருக்கலாம் என்ற ஆசையையும் தூண்டுகிறது.

உள்ளே உள்ள கவிதைகளும் வடிவமைப்புக்குச் சற்றும் குறைந் தல்ல என்று மிக அருமையாக வார்க்கப் பட்டுள்ளன. அனுராதா கட்டபொம்மன் அவர்களின் அணிந்துரையோடு தொடங்குகிறது. அவரது அன்னையாரின் வாழ்த்துரையும் உண்டு.

யார் கை அழகு எனத் தொடங்கு கிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குழந்தைகளாய் இருக்கும் போது மருதாணியின் மேல் இருக்கும் மோகமும் முதல்நாள் போட்டுவிட்டு மறுநாள் காலை யார் கை அதிகம் சிவந்திருக்கும் என ஒரு போட்டியே நடக்கும். அதனை அழகாக ஞாபகப்படுத்துகிறது இக்கவிதை.

காதலின் நோக்கம் ஒன்றுதான் என்று தவறான ஒன்றை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் கவிஞர். ஆனால் எல்லோருடைய காதலின் நோக்கமும் அவ்வாறிருப்பதில்லை என்பது அவரவர் அனுபவத்தில்தான் தெரியும்.

ஞாபகம் வருதே என்ற கவிதை அனைவரிடத்திலும் அவரவர் ஞாபகத்தை வெளிக்கொணரும் என்பது உண்மை

‘‘காதல் என்றே
அருகில் வந்தாய்

நீயே எனதுயிர்
என்றாய்

விட்டு விலகேன்
என்றாய்

ஆனால்
சென்று விட்டாய்

காத்துக் கொண்டு
கண்ணீருடன் நான்
அதே இடத்தில்’’

ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும் அற்புதக் கவிதை.

நிறைய கவிதைகள் அகப்பொருள் தாங்கியே உள்ளன. சில கவிதைகள் சமூகத்தைச் சாடியுள்ளன. காவிரியை அழைத்து உள்ளன. வானத்தையும் மேகத்தையும் நிலவையும் காதலையும் கடலையும் எல்லா கவிஞர்களைப் போலவே இவரும் விளித்து எழுதியுள்ளார். கவியரங்கங்களில் பாடிய கவிதைகளும் சில வெண்பாக்களும் இக் கவிதைத் தொகுப்பில் உள்ளன.

‘‘போட்டவிதை புல்லன்று
பெருமரங்காண்
மனிதம் என்னும்
மாபெரும் ஆற்றல்
முயற்சி என்னும்
மூல மந்திரம்
இன்னல் வந்தால்
இடுப்பொடிக்காதோ
எழுவாய் சோதரா
உலகம் உன் கையில்’’

என்ற கவிதை இளைஞர்களுக்கு தன்னம் பிக்கையைத் தூண்டும் வரிகள்

மழை பற்றிய கவிதை மனத்தை சில்லிடச் செய்கிறது

‘‘அடைமழை
குளிரெடுக்கவே
உடல்நனைத்து
மேனிதொட்ட
மழையில்
சிலிர்த்தது மனம்’’

என்கிறார்

யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததைக் கடிந்து கொள்ளும் கவிதையில் இவரது தமிழ்ப்பற்றும் கோபமும் கொப்பளிக்கிறது

சிறகடிக்கும் ஆசையில் சின்ன சின்ன ஆசைகள் தெரிகின்றன.

படிக்கப் படிக்கத் திகட்டவில்லை கவிதைகள் மிகவும் எளிமையான கவிதை வரிகள் படிக்கும் போது இவை நமது வாழ்விலும் நடந்துள்ளதே என யோசிக்க வைக்கும் கவிதைகள்

மரபுக் கவிதைகளும் இவருக்கு எழுதத் தெரியும். அவை சார்ந்த கவிதைகளையும் தனியாக ஒரு தொகுப்பு வெளியிடவும் மேலும் பல கவிதைகளை வெளியிட்டுச் சிறப்புறவும் வாழ்த்துகிறேன்.

ஆசிரியர் :
தென்றல் கவி (தமிழ்ச்சிட்டு)
தஞ்சாவூர்
அலைபேசி : 9865840100

பதிப்பாசிரியர் :
தமிழ்நெஞ்சம் அமின், பிரான்சு
editor@tamilnenjam.com

பக்கம் 148 ,
விலை ரூ 150 /


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »