02

ஹைக்கூ ஜப்பானில் ஜென் புத்தமதத் துறவிகளால் ஜென் சார்ந்தும்.. அவர்களது வாழ்வியல்.. இயற்கை சார்ந்தும் எழுதப்பட்ட ஒரு கவிதை வடிவம்.. அக்கவிதை ஜப்பானில் பிறந்த விதம் மற்றும் அக்கவிதையின் முன்னோடிக் கவிஞர்கள் குறித்தும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

ஹைக்கூ..ஜப்பானில் பிறந்திருந்தாலும் இன்று உலகம் முழுவதும் பரவலாக வரவேற்பையும்.. புகழையும் பெற்ற ஒரு கவிதை வடிவமாக இருப்பதற்கு எளிய வடிவ அமைப்பேயாகும்.. அது மட்டுமல்லாது வாசகனையும் சிந்திக்கத் தூண்டி விடும் வகையில் எழுதப்படுவதும் ஒரு காரணம்.. உலகம் முழுவதையும் தங்கள் காலனி ஆதிக்கத்தில் வைத்திருந்த ஆங்கிலேயர்களே இதனை ஜப்பானிலிருந்து தங்கள் நாட்டிற்கு முதலில் கொண்டு சென்றனர்.. மேலைநாட்டுக் கவிஞர்கள் கவிதைகளை கட்டுரை போல எழுதிக் கொண்டிருப்பவர்கள்.. சொல்ல வரும் கருத்தினை நேரடியாகச் சொல்லத் தெரியாது.. கற்பனை கலந்தே சொல்லி பழக்கப் பட்டவர்கள்.. அப்படிப் பட்டவர்களுக்கு இந்த எளிய வடிவமும்.. தேவையற்ற சொற்கள் இல்லாது பல எண்ண அலைகளை உருவாக்கும் ஹைக்கூ கவிதை வடிவம் அவர்களை ஈர்த்ததில் ஆச்சர்யமில்லை.. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் தான் ஹைக்கூ தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் துவங்கியது எனலாம்.

இவ்வாறான காலக் கட்டத்தில் தான்.. 1916 ல்.. கல்கத்தாவில் வெளியான மாடர்ன் ரிவ்யூ பத்திரிக்கையில் நோகுச்சி எனும் ஜப்பான் புலவரின் ஹைக்கூ குறித்த மொழிப் பெயர்ப்பு கட்டுரையும்.. சில கவிதைகளும் வெளியாக… அதனைக் கண்ணுற்ற நமது மகாகவி சுப்பிரமணிய பாரதி சுதேசமித்திரன் நாளிதழில் 16.10.1916 அன்று ஹைக்கூ குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.. அவரது கட்டுரை ஹைக்கூவின் தன்மையை அலசினாலும்.. மேலை நாட்டவரை அது கவர்ந்த காரணம் குறித்தும் எழுதினார்.

ஆனால் வங்க மொழியில் ஹைக்கூ ரவீந்திரநாத் தாகூர் போன்றோரை கவர்ந்தது.. இயற்கையை பாடுவதையும்..உயிர் இரக்கச் சிந்தனை கொண்டதுமான ஹைக்கூ தாகூரை எளிதில் வசீகரித்தது.

மேற்கத்திய நாடுகளின் ஆங்கில கவிதைகளினால் ஈர்ப்புற்ற தாகூர்… ஹைக்கூ கவிதை வடிவையும் வரவேற்கவே செய்தார்.. இதனால் தமிழ் மொழியில் ஹைக்கூ நுழையும் முன்னரே வங்க மொழியில் ஹைக்கூ ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டது எனலாம்.

தமிழில் ஆத்திச்சூடி.. திருக்குறள் என குறுகிய வடிவ கவிதை வடிவம் உள்ள நிலையில் பாரதியை இந்த ஹைக்கூ கவிதை வடிவம் எந்தவொரு ஈர்ப்பையும் உருவாக்கவில்லை எனலாம்.. பல மொழி தேர்ச்சி பெற்ற அவருக்கு யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதானது எங்கும் காணோம் என்ற பாரதியை ஹைக்கூ கவரவில்லை என்றே சொல்லலாம்.

1916 ல் தமிழில் பாரதியால் அறிமுகம் செய்து வைக்கப் பட்டும்.. ஹைக்கூவால் தமிழில் தலையெடுக்க அரை நூற்றாண்டு கால தவம் செய்ய வேண்டியதாய் போயிற்று.. ஐம்பது ஆண்டுகள் ஹைக்கூவே காத்திருந்த பொழுது… நீங்கள் பொறுத்திருங்கள்..ஹைக்கூவின் அடுத்த நிகழ்வை தெரிந்து கொள்ள..

அதுவரை.. நீங்கள் அசைபோட…

தத்திதத்தி நடக்கும் சிட்டுக்குருவி
தாழ்வார ஓரங்கள் முழுதும்
ஈரப்பாதங்கள்…!

_ ஷிகி ( 1867-1902 )

இன்னும் வரும்..

தொடர் 01 


1 Comment

Khudhabux Gulamrasool · ஜூன் 17, 2019 at 17 h 15 min

ஆராய்ச்சி பூர்வமான ஹைக்கூ விளக்கம். நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

தன்முனை

மலர்வனம் 6

தன்முனை

ஜென்ஸி

நெஞ்சொடு கிளத்தல்

புத்தக அந்தாதி

1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?

 » Read more about: மலர்வனம் 6  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18

வெண்பா வகைகளில்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா

ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 18  »