என்னையா கேஸு? ”

“ஐயா பொண்டாட்டி தலைய துண்டா வெட்டிட்டு கத்தில ரத்தம் சொட்ட சொட்ட வந்து சரண்டர் ஆகியிருக்கான்யா !!”

“அந்தாள லாக்கப்ல உக்கார வச்சிட்டு டீ சொல்லுயா!” பொறுமையாக டீ யை குடித்தவர் லாக்கப்பைத் திறந்து அவனருகில் அமர்ந்து,

“வெட்டிக் கொல்ற அளவு அப்பிடி என்னையா கோவம் உனக்கு ?!”

“சார் காலைல வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வரும்போது வீட்ல இருந்து இன்னோரு ஆம்பள வெளியில வந்தா எந்த ஆம்பளையா இருந்தாலும் இதத்தான் சார் பண்ணுவான்!”

“அதுக்கில்லையா உம்மூஞ்சப் பாத்தா கொல பன்றளவுக்கு போறவனாத் தெரியலையே! நீ கொஞ்சம் அவசரப் பட்டுட்டியோன்னு தோணுதுயா!”

“அவள அடிச்சி பத்தி விட்டுட்டு உன்ன புரிஞ்சவள ஒருத்திய சேத்துகிட்டு நீ வாழ்ந்திருக்கலாமேயே. அவளையும் கொன்னுட்டு வாழ் நாள் பூரா ஜெயில்ல கழிஞ்சி ரெண்டு பேரு வாழ்க்கையும் வீணாப் போச்சேயே?”

“நம்மளத்தான் நல்லவனாவே இருக்க விட மாட்றாளுங்களே சார்! கல்யாணத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன் தெரியுமா சார் !?” என குலுங்கி அழ ஆரம்பித்து விட்டான்!

”அதுக்குத்தான்யா அந்த ஒரு நிமிஷம் நீ உங்கோபத்த கட்டுப்படுத்தி இருக்கலாம்! அப்புறம் மிருகங்களுக்கும் நமக்கும் என்னய்யா வித்தியாசம் ??!  உணர்ச்சிகள கட்டுப்படுத்த தெரிஞ்சவன்தான் மனுஷன்!  நீ அந்த நொடி மனுஷனா நடந்துகிட்டிருக்கலாம்!  இப்ப என்ன பாரு ஒரு நாளிக்கி எத்தன பாக்கறேன் எவ்ளோ டென்ஷன்லயும் இவ்ளோ மனக் கட்டுப்பாட்டோட இருக்கேன், கொஞ்சம் நேரம் உங்க ரெண்டு பேரையும் உக்கார வச்சி கவுன்சிலிங் கொடுத்திருந்தா பரஸ்பரம் பிரிஞ்சோ மனசு மாறி ஒன்று சேர்ந்தேகூட வாழ்ந்திருக்கலாம்! அவசரப்பட்டு இப்படி வெட்டி போட்டுட்டு வந்து நிக்கறையே! போய்யா …” என்று சொல்விட்டு,

“கதிரேசா நைட் டூட்டி யாருய்யா ?!”

“ஐயா நம்ம மனோகரும் அந்த புது பையன் சுகுமாரும்யா!”

“சரிய்யா நான் கெளம்பறேன் பாத்துக்க. அவன் மேல ஒரு கண்ணு வச்சிக்க சொல்லுய்யா! ஏதாவது பண்ணிக்க கிண்ணிக்கப் போறான்! காலைல கோர்ட்ல ஆஜர் பண்ணணும். வறன்யா.”

இரவு 11.40 வீட்டிற்கு வந்த இன்ஸ்பெக்டர் காலிங் பெல்லை அழுத்தப் போக கதவு தாளிடப் படமால் இருந்தது. திறந்து உள்ளே சென்ற அவர் பெட்ரூமில் ஏதே சலசலப்பும், பேச்சுக்குரலும் கேட்க கதவைத் திறந்தார்! உள்ளே அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலையச் செய்தது! தானிருக்க வேண்டிய இடத்தில் வேறொருவனைப் பார்த்த அவருக்கு இரத்தம் சூடாகி கொப்பளித்த கோபத்தில் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் மாறி மாறி தோட்டாக்கள் தீரும் வரை சுட்டார் !! இருவரது உடலும் சிறிது நேரம் துடித்து அதே இடத்தில் அடங்கிப் போனது!

சில நிமிடங்களுக்குப் பிறகு சுய நினைவு வந்த இன்ஸ்பெக்டர் தலையில் கைவைத்துக்கொண்டு கீழே அமர்ந்தார் !!

மறுநாள் கோர்ட்டுக்குப் புறப்படும் போலீஸ் வேனில் அந்தக் கைதியோடு இன்ஸ்பெக்டரும் கை விளங்கோடு !!

இப்போது அவன்

“சார் மனுஷங்க எல்லாருமே உணர்ச்சிகளுக்கு அடிமையானவங்கதான் சார்! உணர்ச்சிகள கட்டுப்படுத்த தெரிஞ்சவங்கதான் சார் !! ஆனா அதையும் மீறும் சந்தர்ப்பங்களில் இதுதான் சார் !! என்ன அப்போ எங்கையில கத்தி !? உங்க கையில துப்பாக்கி அவ்ளதான் சார் வித்தியாசம் !!”

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »