தன்முனை
ஜென்ஸி
நெஞ்சொடு கிளத்தல்
புத்தக அந்தாதி
1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?
2.
மனைவி மக்களைப் பேணுதல்
மனங் கொள்ளா இன்பம்.
பணம் எனும் பெருவலை
பாடாய் படுத்துகிறது…
3.
உன் வீட்டுப் பூட்டுக்கு
விசுவாசம் உண்டு – நீயேன்
அடுத்த. வீட்டு சாவியை
ஆசையோடு பார்க்கிறாய்..?
4.
வெள்ளிக் காசுகளின் பளபளப்பில்
மயங்கி விடாதே – அது
கொள்ளி வைக்கும் நிம்மதிக்கு.
மறந்து விடாதே.
5.
பிறர் மனதை நோகடிக்க
உனக்கென்றும் உரிமையில்லை – அந்த
தரங் கெட்ட. செயலாலே
வந்ததென்ன… புரியவில்லை.
6.
பேசாமல் இரு…அந்தப்
பருவக் குயில் போகட்டும்.
ஆசைப் பெண்டாட்டி
என் அருகில் இருக்கின்றாள்..
7.
தெய்வமாகவும் இருக்கிறாய்.
திருடனாகவும் இருக்கிறாய்.
பொய்யாய் நடிப்பதேன்..
பதில் சொல்…மனமே..!!
8.
திடமான. விடயங்களையும்
அடைகாத்தி ருக்கிறாய்.
மட நெஞ்சே… நீயென்ன
முதுமக்கள் தாழியா..?
9.
பூமிக்கு வருகையில்
மல்லிகைப் பூவாய் இருந்தாய்.
இப்போது மட்டும் ஏன்
இருளைப் பூசிக் கொண்டாய்..?
10.
நல்ல. ரத்தம் இருக்கையிலே
நல்ல. வழி காட்டு – நான்
தள்ளாடி நடக்கையிலே
அமைதி ஒளியூட்டு…!
1.
தத்துவமா..?
நான் தலையணையா..?
புத்தகம் என்னிடம்
கேலியாய் கேட்கிறது.
2.
கேட்டதைக் கொடுக்கும்
கற்பக. விருட்சமே – உனைப்
பார்த்து விட்டேன்…
என் அலமாரி அடுக்கில்.
3.
அடுக்கடுக்காய் துயரங்கள்
ஆட்கொண்ட. நேரத்தில்
நொடிப் பொழுதில் மாற்றியெனைத்
தேற்றுகிறாய்….தூயவனே..!!
4.
தூய்மையின் இலக்கணமாம்
மாமழை போன்றவனே – உனை
சேய் போல் ஏந்துகிறேன்.
ஞானவழி சொல்லிக் கொடு.
5.
” கொடுத்துக் கொண்டேயிருக்கிறாய்
எப்படி…? ” என்கின்றேன்.
” அமுதசுரபியின் இலக்கணம்
அது..” என்கிறாய்..நீ.
6.
நீயும் நானும்
நூலகத்தி லிருந்தோம்.
மறந்தே போயின…
பசியும் உறக்கமும்.
7.
உறங்கிக் கிடப்பவர்க்கு
விழிப்பு தரும் விடியல் – அவர்
பிறந்த. பொருளுணர்த்தி
மேன்மை தரும் புதையல்.
8.
புதையல் பூமியாம்
நூலகத்தில் தொலைந்து போனால்
பல. நூறு அறிஞர்கள்
நமைத் தேடி வருவார்கள்.
9.
வருவாரும் போவாரும்
சொன்னதெல்லாம் கொஞ்சம் – நட்பே
உன்னைப் போல் வழிகாட்டி
கிடைக்கவில்லை… இன்னும்
10.
இன்னும் ஒரு பிறவி
கொடுத்து விடு… இறைவா…!!
நல்லதொரு புத்தகத்தில் – ஒரு
வார்த்தையாக. வாவது…!!