அவனுக்கு ரெண்டு அக்காமாருக ஒரு தங்கச்சி ஒரு தம்பி அப்பா சிகிரெட் புடிச்சி குமிச்சதால போய்ச்சேந்துட்டாரு மாரடைப்புல . இவனத்தவிர மீதி எல்லாருக்கும் கலியணாமாகி வெளியூறு போயிட்டாங்க .இம்புட்டுக்கும் இவந்தான் எல்லாத்துக்கும் மூத்தவன் ஆனா கலியாணம் பண்ணிக்கல குடும்பத்த கரைசேக்க. அப்பா போனதுக்கப்புறம் அம்மாவும் இவனும் தனியா பொழப்ப ஓட்டுனாக மத்தவங்க எல்லாம் வந்து பாத்துட்டுப் போவாக.

இவன அம்மா நல்லா இருக்குறவரைக்கும் முடிஞ்ச அளவு கவனிச்சிச்சி. அது அடிக்கடி சொல்லும் நா இருக்குறவரைக்கும் ஒன்னப்பாத்துக்குவேன் அப்புறம் யாரு கவனிக்கபோறாங்களோன்னு கவலையாச்சொல்லும் அப்ப எல்லாம் அவன் சொல்லுவான் அதெல்லாம் சாமாளிப்பேன்னு இப்புடித்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.

காலும் ஒடஞ்சிபோச்சி. அதுக்குக் கட்டுப் போட்டுருந்தாக படுக்கைய விட்டு அசைய முடியல ஒண்ணுக்கு ரெண்டுக்கு போகமுடியல ரொம்பச் செரமமாப்போச்சு இப்ப எல்லாம் படுக்கையிலயேன்னு ஆகிப்போச்சு தெனம் இதைச் சமாளிக்கிறது அவனுக்கு வந்து சேந்துச்சு. அப்ப அவங்களால அவசரத்துக்கு போகமுடியல , பகல்ல துணியக்கிணிய வைச்சி சமாளிச்சான் அதை அலசிக்காயப்போட்டு ஓட்டுனான் ஆனா ராத்திரில என்ன பண்ணுறதுன்னு தெரியல அதைச்சமாளிக்க ஒரு மணிய செட்டப் பண்ணினான் அவசமுன்னா அத அம்மா அடிக்கிறமாதிரி வேலசெய்யிற கைப்பக்கம் வச்சான் . செலநேரம் அது சரியாப்போச்சு .ஆனா பல நேரம் படுக்கையில போறமாதிரி ஆகிப்போச்சு.

அம்மா கண்ணு கலங்குனாக ஒரு ஆம்பளைப் புள்ளைக்கி இப்புடிச் சோதனையக் குடுத்துட்டனே ஆண்டவன் என்னை சீக்கிரமே கூப்புட்டுக்கனும்ன்னு அழுதாக அப்ப அம்மா கண்ணீரத்தொடச்சி விட்டுச்சொன்னான். நான் கொழந்தையா இருக்குறப்ப இதெல்லாம் நீ எனக்குச்செஞ்ச இப்ப நீ என்னோட மக ஒனக்கு நான் செய்யிறேன் என்னோட கொழந்தம்மா நீன்னான். அவனுக்கும் கண்ணு கலங்குச்சு

கடவுளு சோதனைய நிறுத்தல இன்னும் அதிகமாக்குனாரு. அம்மாவுக்கு திடீருன்னு உதிரப்போக்கும் வந்துடுச்சு. இப்ப அவங்க வாயிவிட்டு அழுதுட்டாங்க கடவுளே இப்ப என்ன கொடுமையான சோதன இப்புடிப்பண்ணிட்டயேன்னு அழுதாக.

அப்ப நர்ஸம்மா ஒண்ணு பக்கத்து வீட்டுல இருக்குறது ஒதவிக்கு வந்துச்சு அது சொல்லுச்சி இப்பல்லாம் எல்லாத்துக்குமே பேடு வந்துருச்சி. மொத்தமா வாங்கி வைச்சிக்கங்க தொவைச்சிக் காயப்போடவேண்டிய அவசியமில்ல. செரமம் கொறையும்ன்னு சொல்லிச்சி.

தேவப்படும்போது கூப்புடுங்க நான் ஒதவிசெய்யிறேன்னு அப்ப அப்ப ஒதவிக்குவந்துச்சு. ஆனாலும் பேடு வைச்சி மாத்துறவேலையும் குளுப்பாட்டுற வேலையும் அப்ப அப்ப கழுவி டுறவேலையும் அவனே செஞ்சான்.

அம்மா அப்ப எல்லாம் அழுகும் அம்மா இந்தபாக்கியம் எனக்குக் கெடச்சிருக்கு இது சுமையில்ல வரம் நீ வருத்தப்படாதன்னான் இன்னும் சோதனை வந்துச்சு வெளியபோகுறதுல சிக்கலாச்சு அதுனால இனிமாக் குடுத்தாத்தான் வெளிய போகுற நெலமையாகிபோச்சு. தினம் அம்மாவுக்கு இனிமாக்குடுத்து வெளியபோகவைச்சான். நர்சம்மாவே ஒரு நா அழுதுட்டாக அண்ணே உங்களைக் கடவுளுக்கு மேல வைச்சிப்பாக்குறேன் எப்புடி இப்படியெல்லாம் இருக்கீங்கன்னாங்க.

அப்ப அவன் சொன்னான்… நான் பொறக்கும்போது சப்பாணியாப் பொறந்தேன் எட்டுவயசுவர நடக்கல. அப்பஎல்லாம் ஒரே எடத்துல ஒண்ணுக்கு ரெண்டுக்குப்போயிடுவேன். அம்மா மொகம் சுழிக்காம சுத்தம் பண்ணுவா. நான் ஒண்ணுக்கு ரெண்டுக்குப்போன டவுசர அலசிக்காயவைப்பாங்க. அப்ப காசல்லாம் அந்த அளவுக்குக்கெடையாது. பயங்கரமா நாத்தமடிக்கும் அத மொகம் சுழிக்காகச் செய்வாங்க. பக்கத்துல இருக்குறவுக திட்டுவாக காயப்போடும்போது அதையும் தாங்கிக்கிட்டாக அப்பெல்லாம் நான் நெனச்சிக்கிவேன். அடுத்த சென்மத்துல நான் அம்மாவாகி எனக்கு மகனா அம்மா பொறக்கனும் நான் அதுக்கு இதெல்லாம் செய்யனும்ன்னு.

கடவுளு ஒனக்கும் உங்க அம்மாவுக்கும் எதுக்குடா இன்னொரு சென்மம் இந்த சென்மத்துல தாறேன்னு குடுத்துருக்காரு அதசரியாச்செய்யனும் ஆண்டவன் அதுக்குண்டான மனோபலத்தை எனக்குக்குடுக்கனும்ன்னு கண்ணுல கண்ணீர் ஊத்தசொன்னான். கேட்டநர்சம்மா கண்ணுலயும் தண்ணீர் ஊத்துச்சுஅப்ப அம்மா கேவிக்கேவி அழுகுற சத்தம் ரெண்டுபேரையும் உளுக்கிடுச்சு.

 

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »