ஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்..

அப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி.. தரையை காலால் உதைத்து.. கால் தண்டையின் பரல்கள் சத்தமிட.. பொக்கைவாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தது.. அம்மாவிடம்.. ம்.. ம்.. சொல்லி கதை கேட்டுக் கொண்டிருந்தது..

இந்த வர்ணனைகளை நான் எழுதுவதற்குள்.. கதை விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்தது.. “எங்கம்மா.. அதான் உன் பாட்டி எனக்கு கல்யாணச் சீர்வரிசையில் அழகான வெள்ளித்தட்டு ஒன்றைக் தந்திருந்தாங்க.. அந்த தட்டோட கதை சொல்லவா..?!

தீபாவளிக்கு தீபாவளி தவறாமல் அந்த தட்டு..இந்திப் படிக்கப் போகும்.. யார் கிட்ட.. சொல்லு பார்ப்போம்..

அடகுக் கடை சேட்டு கிட்ட.. ஒவ்வொரு முறையும்.. சேட்டு தட்டின் பின்னாடிப் போட்ட சாக்பீஸ் கோடுகள் இன்னமும் ராமர் அணில் முதுகில் போட்ட வரிகளாய்.. இறந்த கால வாழ்க்கையின் அழிக்க முடியாத சுவடுகளாய் இருக்கு.. தெரியுமா.. என்று சொல்லி பெருமூச்சுடன் நிறுத்தினாள்…

குட்டிப் பாப்பா ரத்னா.. ம்ம்.. ம்ம்.. அம்மாவ பார்த்து கேவ.. கதை கேட்கணுமா செல்லக் குட்டிக்கு.. .. சொல்றேன் கேளு..

ஆனா கடைசி வரை எங்க அப்பா..அதான் உங்க தாத்தா தட்டை மூழ்க விடலயே.. வெளிர் சிவப்புக் நிறத்தில் ஏல ரசீது எல்லா வருசமும் வரும்.. வந்தவுடனே கடைசி நேரத்திலயாவது தாத்தா ஓடிப் போய் வட்டியவாது கட்டி விடுவார்.. அசல் மீண்டும் குட்டிப்போடும்.. பத்து வெள்ளித் தட்டுகளின் விலை கொடுத்தாலும்.. பாட்டி மனசு வருத்தப்படக் கூடாதுன்னு தாய் வீட்டு சீதனத்தை அ(டை) டகு காத்து..(குட்டிப் போட்ட வட்டி) குஞ்சு பொறிக்க வைத்த தாயுமானவர்..அப்பா..” யென நிறுத்தினாள்..

அதற்கு மேல் விஜிக்கு வார்த்தை வரலை..அழத் தொடங்கியிருந்தாள்..

அம்மா அழுவதைப் பார்த்து.. குழந்தையும் அழத் தொடங்கியது… சிறிது நேரத்தில் இருவரும் உறங்கி விட்டனர்..

சரி.. கதாசிரியரா கடைசி வரிகள நானே எழுதிடறேன்.. விஜியின் தந்தை மகளை மட்டும் தாரை வார்க்க வில்லை.. தங்க மகளுக்காக வெள்ளித் தட்டையும் தாரை வார்த்து விட்டார்.. (பரிசளித்தார்.) .

ஏனோ.. எனது விழிகளிலும் ஈரம் துளிர்த்திருந்தது..


3 Comments

எஸ்.கேசவகுமார் · நவம்பர் 5, 2018 at 17 h 48 min

அன்பான பெண்ணுக்கு வெள்ளி தட்டை தாரை வார்த்தது
அம்மாவின் உள்ளம் தன் தாரையின் நினைவோடு
மகிழ்ந்தாளோ….

தாய்க்கு தந்த பெருமை.

சாரதா.க.சந்தோஷ் · நவம்பர் 10, 2018 at 0 h 41 min

நட்புறவுகளிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எழுதிய சில மணித்துளிகளிலேயே.
எனது ஒரு பக்க கதை. தமிழ்நெஞ்சம் இதழாசிரியரால் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நெஞ்சம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டதை.. எனது எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்..

தமிழ்நெஞ்சம் இணைய தளத்தில் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

நன்றி தமிழ்நெஞ்சம்!

அரசர் · நவம்பர் 28, 2018 at 8 h 22 min

படித்ததும் ஏதோ இனம்புரியாத கனம் நெஞ்சுக்குள்.. படிப்பவரை கதைப்போக்கின் வன்மையை உணரச்செய்வதே படைப்பின் வெற்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

குட்டிக் கதை

நகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும்

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது.

”எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது.

 » Read more about: நகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும்  »

கதை

டைரிக்குறிப்பு…

குளிரும்.. மழையும் கைகோர்த்து..

அஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன..

மாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது..

பரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்..

 » Read more about: டைரிக்குறிப்பு…  »

கதை

நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்

தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்னை? எதற்கு கவலை?” என்றார் குரு. “எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள்.

 » Read more about: நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்  »