திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 75
பாடல் – 75 வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத் துணர்வுடையா னோதிய நூலும் – புணர்வின்கண் தக்க தறியுந் தலைமகனும் இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். (இ-ள்.) வள்ளன்மை – வரையாது கொடுத்தலை, பூண்டான்கண் – அணியாக மேற்கொண்டவனிடத்துள்ள, செல்வமும் – பொருளும்; உள்ளத்து – உள்ளத்தில், உணர்வு உடையான் – (கேட்டதனை) நினைத்துப் பார்க்கும் இயல்புடையவன், ஓதிய நூலும் – கற்ற நூற்புலமையும்; புணர்வின்கண் – (பிறர் தன்னைச்) Read more
